4156. கொள்ளவென்று சொல்லுகையில் அடியேன்தானும் கொப்பெனவே கெம்புந்தி எங்கேயென்றேன்
விள்ளவே எந்தனுக்கு
சொன்னாரப்பா விருப்பமுடன் வடகோடிகானகத்தில்
அள்ளவே அயோத்திநகர்
மேற்பாகத்தில் அழகான கெம்புந்தி என்றுரைத்தார்
மெல்லவே கெம்புந்திக்
காணவென்று மேன்மையுடன் குளிகைகொண்டு விடைபெற்றேனே
விளக்கவுரை :
4157. பெற்றேனே சித்தரிடம்
விடைகள்பெற்று பேரான குளிகைதனை பூண்டுகொண்டு
சுற்றமுடன் அயோத்திநகர்
தன்னைநோக்கி சூட்சமுடன் மேற்பாகந்தன்னிற்சென்றேன்
வுற்றதொரு குளிகைகொண்டு
மேற்பாகத்தில் ஓகோகோ நாதாக்கள் இருக்கும்ஸ்தானம்
வெற்றியுடன்
காலாங்கிதனைநினைத்து விருதுடனே அடியேனும் இறங்கினேனே
விளக்கவுரை :
[ads-post]
4158. இறங்கினேன் அயோத்திநகர்
மேற்பாகத்தில் எழிலான கெம்பாறு நடுமையத்தில்
திறமுடனே கெம்புகல்
மண்டபந்தான் தெளிவான பதியென்று குகைதானுண்டு
நிறமான கெம்பென்ற
சித்தர்தானும் நீலவர்ணன் முகம்போல சித்தொன்றுண்டு
உறமான மண்டபத்தில்
தவசியாரும் வுற்பனமாய்த் தானிருக்கக் கண்டிட்டேனே
விளக்கவுரை :
4159. கண்டிட்டேன் குளிகையது
பூண்டுகொண்டு கடிதான கெம்பாறு நடுமையத்தில்
தண்டுளமாலையணி கிருஷ்ணன்போலே
தவமுடைய சித்தொருவர் அங்கேயுண்டு
மண்டனுகர் தானறியா
தீவுதானும் மகத்தான கெம்பாறு மண்டபந்தான்
அண்டமெலாம் தான்புகழும்
நதிதானப்பா வப்பனே கெம்பாறு பார்த்திட்டேனே
விளக்கவுரை :
4160. பார்த்தேனே ரிஷியாரை
யடியேன்தானும் பட்சமுடன் பக்கல்தனில் யானுஞ்சென்றேன்
தீர்த்தமுடன்
கெங்காநதிபானத்தோடு திறமுடனே வஞ்சலிகள் மிகவுஞ்செய்தேன்
சேர்ந்ததுமே எந்தனையுங்
கொண்டனைத்து சிறுபாலா எங்குவந்தீர் என்றுரைத்தார்
ஏர்க்கவே எந்தன்மேல்
பட்சம்வைத்து எழிலான வாசீர்மம் சொன்னார்பாரே
விளக்கவுரை :