4151. செப்பவென்றால் அவர்களிடம்
கிட்டிநின்றேன் செங்கதிரோன் போல்வீசும் சடலமப்பா
ஒப்பவே தேகமது ரோமந்தானும்
உத்தமனே கரடியென்றே செப்பலாகும்
இப்புவியில்
யாரேனுங்கண்டதில்லை எழிலான கரடிமயிர்சித்தரப்பா
அப்பதியில் ஆசீர்மம்
யாருங்காணார் அலைகடலில் வழிகாணார் மாண்பர்தாமே
விளக்கவுரை :
4152. மாண்பான வையகத்தில்
யானுமல்லோ வளமுடனே குளிகைகொண்டு சென்றேனப்பா
வீண்போகாக் காலமதுயான்கடந்து
விருப்பமுடன் அட்டதிசை காணவென்று
காண்பான வடகோடித்
தாண்டியல்லோ கையிலைபதிக்கொப்பான தீவுதன்னில்
ஆண்மையுடன் சென்றுமல்லோ
சித்துதம்மை வன்புடனே யான்கண்ட வளஞ்சொன்னேனே
விளக்கவுரை :
[ads-post]
4153. சொல்லவே யாசீர்மம்
தன்னில்நின்று சுடரான சித்தர்முனி தன்னைக்கண்டு
வல்லதொரு ரோமமுள்ள
சித்தரப்பா வண்மையுடன் எந்தனையாரென்றுகேட்க
புல்லறிவானதொரு
வடியேன்தானும் புகழுடனே காலாங்கி சீஷனென்றேன்
மெல்லவே எந்தனையு
மாசீர்மித்து மேன்மையுடன் பட்சமது கொண்டார்தாமே
விளக்கவுரை :
4154. கொண்டாரே காலாங்கி பேருரைக்க
கொப்பெனவே ரோமமென்ற கரடிசித்து
சண்டமாருதம் போலக்கோபங்கொண்ட
சகலருமே யென்பேரி லாசீர்மித்து
கண்டுமே யுதேசஞ் செய்வதற்கு
கருத்திலே மனதுவந்து வடியேனுக்கு
விண்டதொரு ஞானோபதேசமெல்லாம்
விருப்பமுடன் போதித்தார் சித்தர்தாமே
விளக்கவுரை :
4155. சித்தான சித்துமுனி
ரிஷிதானப்பா சிறப்புடனே எந்தனுக்கு யாவுஞ்சொல்லி
முத்தான வாசீர்மம்
பெருமைசொல்லி மூதுலகில் மகிமையெல்லாம் தானுரைத்து
எத்தலமுங் கண்டுவந்த
சிறுபாலா எழிலான யாசீர்ம் மகிமையெல்லாம்
சுத்தமுடன் உந்தனுக்கு
யாமுரைத்தோம் சூட்சாதி சூட்சமெல்லா மறிந்துகொள்ளே
விளக்கவுரை :