போகர் சப்தகாண்டம் 4011 - 4015 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4011. காணேணே சீனபதி தேசம்போலே கண்டதில்லை ஒருதேசம் யானுமப்பா
பாலமுடன் சீனபதி கடலோரத்தில் பண்பான மலையொன்று குகைதானுண்டு
வானர்முதல் வந்திறங்கும் பொய்கையுண்டு வளமான மண்டபந்தான் அங்கொன்றுண்டு
தோணவே குளிகையது பூண்டுகொண்டு தொல்லுலகை யான்மறந்து சென்றேன்பாரே

விளக்கவுரை :


4012. சென்றேனே மலையிட்டு மண்டபத்தில் சேனநெடுங்காத வழிபோனேன்யானும் 
நின்றதொரு இடிமலையாம் அங்கொன்றுண்டு நிலையான சப்தரிஷி மலைதானாகும்
குன்றான மலையோரங்குளிகைகொண்டு கொற்றவனார் காலாங்கி தனைநினைத்து
தென்திசையில் பொதிகைமுனி கார்த்தார்ப்போல தேர்வேந்தே யெந்தனையுங் காரென்றாரே

விளக்கவுரை :

[ads-post]

4013. காரென்று சொல்லுகையில் காலாங்கிதம்மை கருத்திலே தான்நினைத்து நமஸ்கரித்து
ஆரென்று நினையாமல் ஐயர்பாதம் வப்பனே வணங்கினேன் கார்க்கவென்று
பாரென்னைக் காத்தருள வேண்டுமென்று பட்சமுடன் ஆதரிக்க மனமுவந்து
சீரென்ற நாமமது பேர்விளங்கி சிறப்புடனே யான்தொழுதேன் போகர்தாமே

விளக்கவுரை :


4014. தாமான அதிசயங்கள் யின்னஞ்சொல்வேன் தாக்கான மலைகளிலே ரிஷிகளப்பா
கோமானகள் தாமறியார் ரிஷியார்தம்மை குவலயத்தில் சத்தரிஷி யானுங்கண்டேன்
நாமான வரீசியென்ற ரிஷியார்தாமும் நலமான முதல்வரையி லிருந்தாரப்பா
வேமானமாகவல்லோ அத்திரியார்தாமும் வேகமுடன் இரண்டாங்கால் வரைமீதுண்டே

விளக்கவுரை :


4015. உண்டான அங்கீசுய ரிஷியார்தாமும் வுத்தமனே மூன்றாங்கால் வரையிலப்பா
திண்டான தவபதியிலிருந்துகொண்டு திறமான யோகநிஷ்டை செய்வாரப்பா
கண்டேனே நாலாங்கால் வரையிலப்பா கனமான புலஸ்தியரைக் கண்டேன்யானும்
சண்டமாருதம்போல ஐந்தாங்காலாம் சங்கநிதி மேல்வரையிலிருப்பார்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4006 - 4010 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4006. கடலான ஏழுவரை கோடிமட்டும் காசினியில் குளிகைகொண்டு சுத்திவந்தேன்
மடலான சீனபதிகடலும்விட்டு மகத்தான திருப்பாலின் கடலுங்கண்டேன்
அடவர்க வஷ்டதிசை சுத்திவந்தேன் அப்பனே மற்றசாகரமும் கண்டேன்
திடலான நெய்க்கடலும் நானும்கண்டேன் தீர்க்கமுடன் வுவர்கடலுங் கண்டேன்நானே

விளக்கவுரை :


4007. கண்டேனே யுவர்கடலை கடந்தபின்பு கடிதானன தயிர்க்கடலை யானுங்கண்டேன்
விண்டேனே மதுபானக்கடலுங்கண்டேன் விரிவான கறுப்பன் சாகரமும் கண்டேன்
அண்டமெலாம்புகழும் நன்னீரான வழகான சாகரமும் கண்ணிற்கண்டேன்
தண்டுலவ மாலையணிகிருஷ்ணன்கொண்ட சாகரமாம் மத்திபத்தில் இறங்கினேனே

விளக்கவுரை :

[ads-post]

4008. இறங்கினேன் கிருஷ்ணனவர் பள்ளிகொண்ட எழிலான கடலினது நடுமையத்தில்
அறங்குடைய ஆவிலையைக்கண்டேனங்கே வப்பனே குளிகைகொண்டு வதின்மேல் நின்றேன்
திறமுடைய குளிகையது வலுவினாலே தீர்க்கமுடன் சென்றேறி வந்தேனப்பா
சிறகில்லாப் பட்சியது போலேநானும் கீர்த்தியுடன் குளிகையினால் பறந்திட்டேனே

விளக்கவுரை :


4009. இட்டேனே சத்தசாகரமுங்கண்டேன் எழிலான சத்ததீவுகளுங்கண்டேன்
திட்டமுடன் சம்புவென்ற தீவதங்கண்டேன் திகழான இலட்சமார் தீவுகண்டேன்
சட்டமுடன் செத்தீவு யானுங்கண்டேன் சார்பான கிரவுஞ்சத்தீவு கண்டேன்
வட்டமாஞ் சாகரத்தின் தீவுகண்டேன் மளமான சான்மலியுங் கண்டேன்பாரே

விளக்கவுரை :


4010. பாரேதான் சான்மலிவு தீவுகண்டேன் பாங்கான புஷ்கரத் தீவுகண்டேன்
நேரேதான் சத்ததீவுகளுங்கண்டேன் நேரான குளிகையது பூண்டுகொண்டு
சீரேதான் காலாங்கி புஜபலத்தால் சிறப்புடனே லோகமெலாம் சுத்திவந்தேன்
கூரேதான் சீனபதி யானுஞ்சென்றேன் குவலயத்தி லிதுபோல ஒன்றுங்காணே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4001 - 4005 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4001. ஆதியென்ற சத்தி பராபரமேகாப்பு அகிலமெலாம் பேர்படைத்த வுமையாள் காப்பு
நீதியெனும் பரஞ்சோதி சுடரேகாப்பு நீடாழி யுலகனைத்தும் கொண்டோன்காப்பு
பாதிமதி சடையணிந்த பரமன்காப்பு பாதாளந்தனில் வாழும் சேடன்காப்பு
ஜோதியெனும் காலாங்கி பாதங்காப்பு சுத்தமுடன் தான்பணிந்தேன் பாதங்காப்பே

விளக்கவுரை :


4002. பணிந்தேனே காலாங்கிநாயர்பாதம் பாங்கான திருவடிக்கி நமஸ்கரித்தேன்
துணிந்bதெனே காண்டமது ஏழுஞ்சொன்னேன் துறையான வாயிரத்துக்கு ஒருகாண்டந்தான்
மணிபோன்ற போகர்யேழாயிரந்தான் மகத்தான நூலிதுகாண் பெருநூலப்பா
கணிதமுடன் காண்டமிது வைந்துமாகும் காசினியில் வெகுமதியை யறியலாமே

விளக்கவுரை :

[ads-post]

4003. அறியவே ஐந்தாவதானகாண்டம் வவனிதனில் அதிசயங்கள் இதிலடக்கம்
குறியான காண்டமது வைந்துக்குள்ளே குவலயத்தில் மலைகுகைகள் சாகரங்கள்
தெரியாத கானாறு குன்றுதானும் தெளிவான சத்தநதி யிதிலடக்கம்
சரியான சீனபதிமார்க்கமெல்லாம் சட்டமுடன் கூறுவேன் போகர்தானே

விளக்கவுரை :


4004. தானான காண்டமது வைந்துக்குள்ளே சாகரத்தின் பெருமையெலாம் சாற்றலாகும்
கோனான யெனதையர் காலாங்கிநாதர் குருபாதந்தனை வணங்கி யானுஞ்சொல்வேன்
பானான மனோன்மணியாள் முன்னேநிற்க பாடிவைத்தேன் போகரேழாயிரந்தான்
மானான நாதாக்கள் என்பேரிற்தான் மனங்கோபங் கொள்ளாமல் மன்னிப்பீரே

விளக்கவுரை :


4005. கொள்ளவே பிரிதிவென்ற பூமிதானும் குவலயத்தில் நான்கிலோர் பங்குமாகும்
விள்ளவே சத்தசாகரமுமப்பா மிக்கான மூன்றுபங்கென்னலாகும்
உள்ளவே காலாங்கி கிருபையாலே உத்தமனார் அடியேனும் குளிகைபூண்டு
தெள்ளமிர்தமானதொரு சாகரந்தான் தேற்றமுடன் திருப்பாலின் கடலுமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3996 - 4000 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3996. இல்லையே நாதாக்கள் சித்துதாமும் எழிலுடனே எல்லவரும் மாண்டாரப்பா
தொல்லையெனும் பிறவியது யற்றுப்போச்சு தோற்றமில்லை வண்டசராசரங்களெல்லாம்
வல்லதொரு வாத்மாவும் காணப்போகா மகத்தான லோகத்து மார்க்கமப்பா
சொல்லவென்றால் நாவில்லைப் பாவுமில்லை தொல்லுலகை மறந்தவனே சித்தனாமே

விளக்கவுரை :


3997. சித்தனாய்ப் பிறந்துமே பாலன்தானும் சிறப்புடனே காலாங்கி கிருபைதன்னால்
சுத்தமுடன் கிழக்கு தென்கிழக்குதானும் சஊட்சமுடன் தென்மேற்கு தெற்குதானும்
பத்தியுடன் மேற்குவடமேற்குதானும் பாங்கான வடகிழக்குதானும்
வெத்தியுடன் சுத்திவந்தேன் குளிகைதன்னால் வேதாந்தத்தாயினது ஒளிகண்டேனே

விளக்கவுரை :

[ads-post]

3998. கண்டதொரு குளிகைதன்னால் கைலையெல்லாங் காசினியோர் தான்புகழசுத்திவந்தேன்
அண்டமுடன் அதிசயங்கள் எல்லாம்பார்த்து வப்பனே காலாங்கி கடாட்சத்தாலே
விண்டிடவே லோகாதிவதிசயங்கள் விருப்பமுடன் வாடிவைத்தேன் சத்தகாண்டம்
சண்டமாருதம் போல வேழாயிரந்தான் சாற்றினேன் லோகத்து மாண்பருக்கே

விளக்கவுரை :


3999. மாண்பான பெருநூலேழாயிரந்தான் மகத்தான நூலிதுதான் நாலாங்காண்டம்
காண்பான சத்தகாண்டந்தன்னிலேதான் கருவிகரணாதியெல்லாம் திரட்டிவைத்தேன்
நீண்பான காண்டமது ஏழுக்குள்ளே நினைத்ததொரு பொருள்களெல்லாங் காணலாகும்
தாண்பான சீனபதி யுலக்தார்க்கு தகமையுடன் செப்பினதோர் நூலிதாமே

விளக்கவுரை :


4000. நூலான நூலிதுதான் நாலாங்காண்டம் நுணுக்கமுடன் பாடிவைத்த சத்தகாண்டம்
பாலான நூலதுபோல் யாருஞ்சொல்லார் பாலகனே வாயிரத்துக்கொருகாண்டந்தான்
சேலான காண்டமது யேழுமாகும் சிறப்பான காவியமேழாயிரந்தான்
மாலான குருநூலாம் பொருநூலாகும் மகத்தான காண்டமது நான்குமுற்றே

விளக்கவுரை :


Powered by Blogger.