போகர் சப்தகாண்டம் 4026 - 4030 of 7000 பாடல்கள்
4026. நெருங்கவே வெகுகோடி
மாண்பரப்பா நேராக எந்தன்முன் வந்துநின்று
குருங்கையென்ற
காமதனைத்தானெடுத்து கொப்பெனவே முடிமீதில் சுமந்துகொண்டு
தருக்கவே யாசீர்மம்
மிகவுஞ்செய்து சட்டமுடன் எந்தனையுங் கேள்விகேட்டு
வருந்தியே இக்காலம்
எங்கேசென்றீர் வண்மையுடன் வந்ததுவும் புதுமையாச்சே
விளக்கவுரை :
4027. ஆச்சென்ற புதுமையது
மிகவுறைத்து வப்பனே யென்தேவா யிக்காலந்தான்
போச்சென்று தேகமது
மனதிலெண்ணி பொங்கமுடன் வந்ததுவும் புதுமையாச்சு
பாச்சலுடன்
காயாதிகற்பங்கொண்ட பாங்கான தேகமது என்றுசொல்லி
வீச்சலுடன்
காலாங்கிகிருபையாலே விதித்துதே காணவல்லோ என்றிட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
4028. இட்டாரே வெகுமாண்பர்
கும்பல்கூடி எழிலாக எந்தனிடம் வந்தாரப்பா
சட்டமுடன் யான்கண்ட
வதிசயங்கள் சார்புடனே யானுரைத்தேன் யோகமெல்லாம்
கிட்டமுடன் மாண்பரெல்லாம்
அதிசயித்து தீரமுடன் வீற்றிருந்தார் சீனந்தன்னில்
பட்டமுள்ள அரசரது
சமாதிவிட்டு பாங்குடனே குளிகைகொண்டு புறப்பட்டேனே
விளக்கவுரை :
4029. புறப்பட்டேன் சீனபதி
கடலோரந்தான் புகழான வதிசயங்களெல்லாம்பார்த்து
திறக்கவே வடக்குமுகந்
திருப்பால்தன்னில் தீரமுடன் குளிகைகொண்டு சென்றேன்யானும்
நிறமாறி தானிருக்கும்
மாண்பரல்லோ நீடான வசுவத்தின் முகத்தைப்போல
உறமான மாண்பர்களைக்
கண்டேனப்பா வுத்தமனே ஜெகத்துக்குள் இருப்பார்தானே
விளக்கவுரை :
4030. இருப்பாரே மலைமீதும்
பாறைமீதும் எழிலான வட்டமதில் இறங்கினேன்யான்
விருப்பமுடன் குளிகையது
பூண்டுகொண்டு வீரமுடன் அவர்களிடம் சென்றபோது
பொறுப்பான மலையொன்று
குகைதானுண்டு பொங்கமுடன் ஐராவதம் என்னலாகும்
குருப்பான ஏழுவரை
வுயரங்காணும் குணமான மலையொன்று கண்டேன்தானே
விளக்கவுரை :