4021. தாமேதான் கமலனுனி
சமாதிபக்கல் தன்மையுடன் யான்சென்று சேர்வைசெய்தேன்
வேடம்தான் சீனபதி
கோட்டைக்குள்ளே வேகமுடன் குளிகைகொண்டு இரங்கினேன்யான்
போமேதான்
சீனபதிபெண்களெல்லாம் போகமுடன் எந்தனுயும் அணையவல்லோ
நாமேதான் நினைத்தபடி
பெண்களெல்லாம் நாட்டமுடன் மோகித்து வனைந்தார்பாரே
விளக்கவுரை :
4022. பாரேதான் நினைத்ததொரு
கல்விதன்னால் பாங்கான சப்தரிஷிபோலேயப்பா
நேரேதான் நினைத்தவண்ணம்
ரிஷிகள்போல் நேர்மையுடன் தான்பிரிந்தார் ரிஷிகளப்பா
சீரேதான் அவர்கொடுத்த
வரத்தினாலே சிறப்பான சப்தரிஷிபிறந்தாரங்கே
கூரேதான் தேவரிஷி
யென்னலாகும் குவலயத்தில் அரசரைப்போல் பிறந்தார்தாமே
விளக்கவுரை :
[ads-post]
4023. பிறந்தாரே சீனபதிவரசுசெய்ய
பேரான சப்தரிஷி யரசரப்பா
துறந்ததொரு ஞானிகள்போல்
அரசரப்பா துப்புறவாய் சீனபதியாண்டதுண்டு
மறந்தாரே வெகுகாலம்
இருந்துமல்லோ வையகத்தில் வாழ்க்கைதனை விட்டுநீங்கி
கறந்ததொரு பால்போலே
ஞானம்பூண்டு காசினியில் வெகுகால மிருப்பார்பாரே
விளக்கவுரை :
4024. இருந்தாரே கோடிவரை
யுகாந்தகாலம் எழிலான சீனபதிக்கேட்டைதன்னை
பொருந்தவே அரசாட்டசி
நடத்தியேதான் பொங்கமுடன் காயாதிகற்பங்கொண்டு
திருந்தவே சமாதிதனில்
இறங்கியல்லோ திட்டமுடன் தாமிருந்தார் சித்துதாமும்
வருந்தவே கோட்டையது
யேழுசுத்து வாகாகத் தலைவாசல் ஏழுதானே
விளக்கவுரை :
4025. ஏழான தலைவாசல் ஒவ்வோர்சித்து யிறங்கியே சமாதியது பூண்டுகொண்டார்
தாழான திருவாசல்
ஒவ்வோர்பக்கம் தன்மையுடன் சமாதியது பெருமைமெத்த
வீழாமல் தேகமது வழியாமற்றான்
வீரான கோட்டையது வாசல்முன்னே
சாழான சமாதியது ஏழுங்கண்டேன்
சட்டமுடன் சீஷவர்க்கம் நெருங்கினேனே
விளக்கவுரை :