4016. பாரேதான்
புலகனாரிஷியார்தாமும் பான்மையுடன் மேல்வரையிலிருப்பாரங்கே
நேரேதான் ஆறாங்கால்
மேல்வரையிலப்பா நேர்மையுடன் பிறகுமகரிஷிதானுண்டு
சீரேதான் ஏழாங்கால்
வரைமேலப்பா சிறப்பான வரிஷ்டருங் கண்டேன்யானும்
தீரேதான்
சப்தமகாரிஷிகள்தம்மை தீர்க்கமுடன் மலையதனில் கண்டேன்தாமே
விளக்கவுரை :
4017. தானான சப்தரிஷி யேழுபேர்கள் தாக்கான மலைகளிலே தவசிருக்கும்
கோனான குகைகளிலே
கண்டேன்யானும் கொற்றவர்கள் ஆசீர்மங்கள் கண்டேன்யானும்
தேனான ரிஷிகளுள் சேர்வையான
தீர்க்கமுடன் ஏழுவகை குளிகைபூண்டு
மானான மனோன்மணியாள்
கிருபையாலே மலைமீதில் ஏழிவரை கண்டேன்காணே
விளக்கவுரை :
[ads-post]
4018. காணவே ரிஷிகளிடஞ்
சென்றேன்யானும் காலாங்கி நாதருட கிருபையாலே
பூணவே ஞானோபதேசம் பெற்றேன்
பொங்கமுடன் கருவிகரணாதியெல்லாம்
தோணவே எந்தனுக்கு உபதேசங்கள்
துரைராஜ சுந்தரனார் சொன்னாரங்கே
வேணவே சகலகலை கியானமெல்லாம்
விருப்பமுடன் பிழைக்கவென்று கொடுத்திட்டாரே
விளக்கவுரை :
4019. கொடுத்தாரே பூவுலகில்
பிழைக்கவென்று குவலயத்தி லென்மீதில் பட்சம்வைத்து
அடுத்ததொரு குளிகைக்கு
வுறுதிசொல்லி அப்பனே சாரனைகள் மிகவுங்கூறி
வுடுத்துமே எந்தனையும்
மலைவிட்டேகி வேதாந்த சித்துமுனி ரிஷிகளெல்லாம்
ஒடுக்கம்வர புத்தியது
மிகவும்கூற ஓகோகோ சப்தரிஷி போவென்றாரே
விளக்கவுரை :
4020. என்றாரே சப்தரிஷி
வுரையும்பெற்று எழிலான காலாங்கி கிருபையாலே
சென்றேனே குளிகையது
மிகவும்பூண்டு சீனபதிக்குள்ளாக வந்தேன் யானும்
நின்றேனே எனதையர்
காலாங்கிநாதர் நிலையான சமாதியிடஞ் சேர்வைசெய்தேன்
குன்றான மலைதனிலே ஏறியல்லோ
கொப்பெனவே கமலமுனி கண்டேன்தாமே
விளக்கவுரை :