போகர் சப்தகாண்டம் 4141 - 4145 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4141. சூழ்ந்தாரே யெனையும் சீஷவர்க்கம் சூட்சாதியானதொரு மார்க்கமெல்லாம்
தாழ்ந்துமே எந்தனையும் கேட்கும்போது சட்டமுடன் யானுரைத்தேன் பச்சைதன்னை
ஆழ்ந்ததொரு கடல்தனிலே மலைதானுண்டு அப்பனே வடகோடியாழிதன்னில்
வாழ்ந்துமே பச்சைமலை தன்னிலப்பா வாகுடனே வெகுகால மிருந்தேன்பாரே  

விளக்கவுரை :


4142. இருந்தேனே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் எழிலான மாண்பர்களே கேளும்கேளும்
திருத்தமுடன் வடகோடியாழிதன்னில் தீரமுடன் பச்சையது எடுக்கவென்றால்
பொருந்தவே நீராவிக்கப்பல் தானும்போகாது கடலுக்குத்தடந்தானில்லை
வருந்தியே சுழலதுவும்மெத்தவுண்டு வாகான பட்சிமுதல் மடிந்துபோமே 

விளக்கவுரை :

[ads-post]

4143. மடியுமே கடலுக்கு மேற்பாகத்தில் வளமுடனே ஆகாயம்பறக்கும்பட்சி
துடியுமே தான்பறந்து சுழலுமாழி துப்புறவாய் சலமதிலே விழுகும்பாரு
அடியில் கற்பாறைதனிமெத்தவுண்டு அலைகடலில் தடமதுவுங் காணப்போமோ
நொடியான வாகாயக்கூண்டுதன்னில் நோக்கமுடன் தீவுக்குசெல்லலாமே

விளக்கவுரை :


4144. செல்லலாம் யானுரைத்த கூண்டினாலே சிறப்புடனே தீவுக்குப்போகலாகும்
வெல்லவே ஆகாயமார்க்கந்தன்னில் விருப்பமுடன் கூண்டைவிட்டு இறங்கியல்லோ
புல்லவே யான்சொன்னவாசீர்மத்தில் புகழான வடகோடி கடலில்தானும்
நல்லதொரு பச்சையென்ற மலையைக்கண்டு நலமுடனே இறங்கியல்லோ யெடுக்கலாமே

விளக்கவுரை :


4145. எடுக்கலாம் பச்சையென்ற களஞ்சியத்தை எழிலான வடகோடியாருதன்னில்
தொடுக்கவே கூண்டுவழிமார்க்கமாக தோராமல் பச்சைதனை எடுக்கவேண்டும்
விடுக்கவே யாகாயந்தனிலெழும்பி விடுபட்டுச் சுழலதனைதாண்டியேதான்
ஒடுக்கமுடன் சீனபதிகோட்டைக்குள்ளே வுத்தமனே இறங்கவென்று வுரைத்திட்டேனே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4136 - 4140 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4136. இறங்கியே மோனகுரு யெதிர்முன்பாக எழிலாக குளிகைகொண்டு நின்றேனங்கே
திறமுடைய சித்தர்களோ வாயிரம்பேர் தீரமுடன் எந்தனை யேசிக்கவந்தார்   
நிற்மான பச்சையென்ற சித்துதாமும் நீராக்கி எந்தனையும் சபிக்கவந்தார்
மாய்போலே நின்றுவிட்டேன் போகர்யானும் மார்க்கமுடன் தள்பணிந்து தரிசித்தேனே

விளக்கவுரை :


4137. தெரிசித்தேன் மோனமகாரிஷியைத்தானும் தீரமுடன் வடகோடிகானகத்தில்
பரிசித்து ரிஷியாரும் பச்சைமீதில் பாங்குடனே வீற்றிருந்த வாசீர்மந்தான்
வரிசையுடன் மோனமகாரிஷியாசீர்மம் வண்மைதனைக் காணவென்று வந்தேன்யானும்
குளிகையென்ற மோனகுரு வாசீர்மத்தை குறிப்புடனே யான்கண்டு வணங்கினேனே

விளக்கவுரை :

[ads-post]

4138. வணங்கவே ரிஷியாரும் என்னைப்பார்த்து வாகுடனே யாரப்பாயென்றுகேட்க
இணங்கவே காலாங்கி சீடனென்றேன் எழிலான மோனகுருரிஷியாசீர்மம்
சுணங்கமது வாராமல் அடியேன்தன்னை சூட்சமுடன் தன்னருகில் வரவழைத்து
மனமுடனே எந்தனுக்கு ஞானோபதேசம் மார்க்கமுடன் வரமதுவுங் கொடுத்தார்பாரே

விளக்கவுரை :


4139. பாரேதான் வெகுகோடி காலமப்பா பட்சமுடன் பச்சையென்ற மலைதான்மீதில்
நேரேதான் அக்கினியும் நவதாதோடு நேர்மையுடன் தானறிந்து இருந்தேனங்கே
சீரேதான் சிலகாலஞ் சென்றபின்பு திகழுடனே மோனமகரிஷியையானும்
சாரமுடன் ஞானோபதேசம்பெற்று சட்டமுடன் சீனபதியேகினேனே

விளக்கவுரை :


4140. ஏகவே சீனபதிப்போகவென்று எழிலான குளிகைதனைப்பூண்டுகொண்டு
வேகமுடன் சீனபதிவந்தேன்யானும் வெட்டவெளி ஆகாயங்கோட்டைதன்னில்
சாகமுடன் குளிகையிட்டு இறங்கியேதான் சட்டமுடன் மாண்பரெல்லாங் கண்டேன்யானும்
சோகமுடன் சீஷவர்க்கங்கண்டபோது சுத்தியெனை வந்துமல்லோ சூழ்ந்தார்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4131 - 4135 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4131. தானான மலைவளத்தை கண்டேன்யானும் தகமையுள்ள சித்தர்களோ சொல்லொண்ணாது
கோனான சித்தரென்னைக் கண்டபோது குவலயத்து மனிதரப்பா குளிகைகொண்டு
ஏனோதான் இம்மலையில் வந்தீரென்றார் எழிலான சித்தரெனைக் கேட்டபோது
நாமேதான் காலாங்கி சீடனென்றேன் நாதாக்கள் காணவல்லோ வந்திட்டாரே

விளக்கவுரை :


4132. வந்தேனே குருவினது பதாம்புயத்தை வணக்கமுடன் காணுதற்கு குளிகைகொண்டேன்
அந்தமுடன் பச்சையென்ற மலையைக்காண வன்புடனே யானுமல்லோ வந்தேனென்றேன்
சொந்தமுடன் யானுரைக்கும் வார்த்தைகேட்டு சுந்தரனார் சித்தர்முனிரிஷிகள்யாவும்
எந்தன்மேல் பட்சமது மிகவும்வைத்து எழிலாக கூறறுற்றார் சித்தர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

4133. சித்தான சித்துமுனி ரிஷிதானப்பா சிறப்புடனே எந்தனையும் போர்த்துமேதான்
பத்தியுடன் காலாங்கிபாதம்போற்றி பாலகனே யிம்மலையில் வந்ததாலே
வெத்திபெற எந்தனையும் சபிக்கவந்த வேதாந்த சித்தரெல்லாம் மனமிதங்கி
சுத்தியுடன் இதிகாசப்புராணமெல்லாம் சூட்சாதி சூட்சமுடன் சொன்னார்பாரே

விளக்கவுரை :


4134. சொன்னாரே எந்தனுக்கு வேகஞானம் சொரூபமென்ற சுடரொளியைக் காணவென்று
மன்னாகேள் காலாங்கி போகநாதர் மகிமையுள்ள ஆசீர்மம் இங்கொன்றுண்டு
தென்பாறை பச்சையென்ற மீதிலப்பா தேர்வேந்தர் அறியாரும் ஒருவருண்டு
முன்னேதான் பெரியார்கள் சொன்னாப்போல மோனமென்ற ஞானகுரு சித்துவுண்டே

விளக்கவுரை :


4135. உண்டான சித்துமகா ரிஷியார்தாமும் ஓகோகோ நாதாக்கள்  ஆசீர்மந்தான்
கண்டேனே பச்சையென்ற மலையின்மீதில் காவலர்கள் ஆயிரம்பேர் சூழ்ந்திருக்க
திண்டான வாசீர்மங் கிண்டியேதான் தீரமுடன் குளிகைதனை பூண்டுகொண்டு
அண்டமதில் தான்பரந்து மேலேநின்று வப்பனே குளிகைகொண்டு இறங்கினேனே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4126 - 4130 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4126. பாரேதான் வடகோடியாழிதன்னில் பாங்குடனே குளிகைகொண்டு யானுஞ்சென்றேன்
நேரேதான் குளிகைகொண்டு செல்லும்போது நேர்மையுடன் ஆசீர்மமமொன்றுகண்டேன்
ஊரதுபோல் கடலாழிநடுமையத்தில் ஓகோகோ தீவதுதான் கண்டேனப்பா
சேரேதான் குளிகையது சென்றுயானும் சேர்ந்தேனே தீவுதனில் கிட்டினேனே

விளக்கவுரை :


4127. கிட்டவே தீவுதனில் செல்லுமபோது கெடியான தேவதா மலையொன்றுண்டு
குட்டவே பாசிபோலிருந்ததப்பா மூதுலகில் மலையென்று நினைத்துக்கொண்டேன்
வட்டமுள்ள பாறைதனை சோதித்தேன்யான் வளமான பச்சையென்ற மலைதானப்பா
திட்டமுடன் கண்டறிந்தேன் பச்சையப்பா திடமான பச்சைமலை பார்திட்டேனே 

விளக்கவுரை :

[ads-post]

4128. பார்த்தேனே மலையினிட மகிமைமெத்த பாருலகில் சித்தர்முனி கண்டதில்லை
தீர்த்தமுடன் மலைமீதில் சுனைதானுண்டு திறமான பச்சையென்ற நிறத்தைப்போல
கார்த்துமே காவலுடன் வெகுகோடிசித்தர் கதிகாணா மலைதனிலே யிருப்பாரங்கே
பூர்த்தியாய் அவர்களிடம் சென்றேன்யானும் புகழாக வடிபணிந்து தொழுதிட்டேனே

விளக்கவுரை :


4129. தொழுதேனே சித்தர்வர்க்கந்தன்னைக்கண்டேன் தோற்றமுடன் குளிகைகொண்டு பக்கல் சென்றேன்
பழுதுபடா மேனியது பார்க்கும்போது பச்சையென்ற திருமேனி யென்னலாகும்
கழுமுடனே யிமாப்பட்சியெல்லாமப்பா காணுகைக்குப் பச்சைநிறமென்னலாமே

விளக்கவுரை :


4130. என்னவே என்தேகம்பச்சையப்பா எழிலான ஜலமெல்லாம் பச்சையப்பா
துன்னவே மண்டலமும் பச்சையப்பா துறையான பூமிமுதல் பச்சையப்பா
பன்னவே பார்லோகம் பச்சையப்பா பாங்கான விருட்சமுதல் பச்சையப்பா
சொன்னதொரு மார்க்கமெல்லாம் பச்சையப்பா சுடரொளியை யென்சொல்வேன் போகர்தாமே

விளக்கவுரை :


Powered by Blogger.