போகர் சப்தகாண்டம் 4161 - 4165 of 7000 பாடல்கள்
4161. சொன்னவுடன் அடியேனும்
கால்நடுங்கி சித்தமுடன் தலைகுனிந்து சாஷ்டாங்கித்தேன்
நன்னயமாய்
காலாங்கிநாதர்தம்மால் நாடிவந்தேன் ஆசீர்மம் தன்னையென்றே
வுன்னிதமாய் கெம்புநதி
காணவென்று உகந்ததொரு குளிகைதனைக் கொண்டுவந்து
மன்னவே யாசீர்மம்
கிட்டிவந்தேன் பட்சமுடன் எந்தனுக்கு அருள்செய்வீரே
விளக்கவுரை :
4162. அருளென்று சொல்லுகையில்
வடியேன்மீது வன்புடனே கிருபையது மிகப்புரிந்து
தெருள்கலையிற் தெள்ளமுதே
தேனேமானே தெவிட்டாத கண்மணியே போகர்பாலா
இருளகற்றஞ் செந்தேனே
சிங்கவெறே எழிலான குணக்குன்றே யோகவானே
பொருளான ஞானோபதேசங்கேட்கும்
பொன்னவனே யுந்தனுக்கு யருள்சொல்வேனே
விளக்கவுரை :
[ads-post]
4163. சொல்வேனே ஞானோபதேசந்தன்னை
சூட்சாதி சூட்சமத்தை யுனக்குரைப்பேன்
வல்லதொரு காலாங்கிநாதர்பாலா
வளமையெல்லா முந்தனுக்கு யோதுவேன்யான்
வெல்லவே ஞானோபதேசமெல்லாம்
விருப்பமுடன் உனக்களிப்பேன் என்றுசொல்லி
புல்லவே பூதலத்தின்
மகிமையெல்லாம் புகழ்ச்சியுடன் எந்தனுக்கு ஓதுவாரே
விளக்கவுரை :
4164. ஓதுவார் கெம்பாறு நதியுஞ்சொன்னார் ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை
வாதுரைத்த எந்தனுக்கு
ரிஷியார்தாமும் வண்மையுள்ள ஞானோபமுரைத்தாரப்பா
மாதுமனோன்மணியாள் கிருபையாலே
மகத்தான மகிமைகளும் சொன்னாரப்பா
சேதுபந்த மானதொரு
கடலின்நேர்மை செப்பினார் எந்தனுக்கு செப்பினாரே
விளக்கவுரை :
4165. செப்பினார் கெம்புதனை
எடுக்கவல்லோ சேதுபந்தம் அயோத்திக்கு மேற்கேயப்பா
ஒப்பவே கெம்பாறு வடமுகத்தில்
ஓங்கியதோர் வோடையுண்டு குகைதானுண்டு
வெப்புடனே வடகோடி
யாற்றையப்பா விண்ணுலகில் கண்டவர்கள் யாருமில்லை
நெப்பமுடன் எந்தனுக்கு
வுளவுசொல்லி நேர்மையுடன் ஓடைதனை காண்பித்தாரே
விளக்கவுரை :