போகர் சப்தகாண்டம் 4191 - 4195 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4191. உண்மையா மின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வுத்தமனே குகைக்குள்ளே செல்வதற்கு
நன்மையுடன் பிரனவமாம் சக்கரந்தான் நலமுடனே யான்கொடுத்தேன் யுந்தனுக்கு
கண்மையாஞ் சக்கரத்தைக் கைபிடித்து கவனமென்ற குளிகைகொண்டு
செல்வாயானால் வண்மையுடன் வுந்தனுக்கு வசியமாவார் வளமுடனே நாதாந்த சித்துதாமே

விளக்கவுரை :


4192. சித்தான சித்துமுனி தன்னைக்கண்டு சிறப்புடனே குகைதனிலே சென்றேன்யானும்
சத்தமுடன் கார்த்தவனார் எந்தனைத்தான் சூரமுடன் எனைவதைக்கத் துணிந்தார்பாரு
பத்தியுடன் அவர்பக்கல் நின்றுகொண்டு பட்சமுடன் பிரனவமாஞ் சக்கரத்தை
வெத்திபெற வுச்சாடம் செய்தபோது வீரபத்திரன் கைவசமுமானார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

4193. ஆனாரே ரிஷியாரும் எந்தனுக்கு வன்புடனே கைவசமுமானார்தாமும்
போனேனே குகைகடந்து சென்றேன்யானும் பொங்கமுடன் வீரபத்திரன் தனைக்கடந்தேன்
வானோர்கள் தான்புகழும் பத்மாசூரன் வண்மையுள்ள குகைதனையே யானுங்கண்டேன்
ஞானோபதேசமது கூறிக்கொண்டு கயம்படவே சமாதிதனி லிருந்திட்டாரே

விளக்கவுரை :


4194. இருந்தாரே பத்மாசூரனையுங்கண்டேன் எழிலான சூரனவர் பக்கல்தன்னில்
பொருந்தவே தாருசாரிஷிகள்தானும் பொங்கமுடன் கொலுவிருந்தார் குகைதானுள்ளே
திருந்தமுடன் குளிகையது கொண்டுயானும் தீரமுடன் சூரனது பக்கல்சென்றேன்
குருந்தமலை சோலையது குகைதானுள்ளே குருபத்மா சூரனையுங்கண்டேன்தாமே

விளக்கவுரை :


4195. தாமான சூரனையுங்கண்டபோது தகமையுடன் எந்தனையும் ஆரென்றேதான்
கோமான்போல் வீற்றிருக்கும் சூரன்தானும் கோலமுடன் எந்தனையு முருட்டிப்பார்த்து
நேமமுடன் சிறுபாலா யாரென்றேதான் நேர்மையுடன் இவ்விடத்தில் வந்ததென்ன
பூமானே என்றுசொல்லி என்னைகேட்க பொங்கமுடன் அடியேனுங் கூறினேனே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4186 - 4190 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4186. மகிழ்ந்தஇட்ட சித்தரென்னை யாசீர்மிக்க மகிழ்ச்சியுடன் அவர்பாதமஞ்சலித்தேன்
நெகிழ்ந்திட்ட ரிஷியாரும் என்னைப்பார்த்து நேர்மையுடன் மலைமீதில் வரலாமோசொல்
தவிழ்ந்திட்ட சிறுபாலா யென்னையிப்போ தன்மையுடன் தெரிசிப்பேனென்றுரைத்து
மகிழ்ந்திடவே ஞானோபதேசஞ்சொல்லி சட்டமுடன் மலைவளத்தை சொன்னார்பாரே

விளக்கவுரை :


4187. பாரப்பா காலாங்கி நாதர்பாலா பட்சமுடன் மலைவளத்தை யானுரைப்பேன்   
ஆரப்பா வெனைப்போலச் சொல்லப்போரார் வப்பனே யானுனக்கு யுறுதிசொல்வேன்
சீரப்பா எந்தனது போகநாதா சிறப்புடனே யானைமலை தீமைகேளும்
நேரப்பா மலைதனிலே யதீதமெத்த நேர்மையுடன் யாம்கண்டவரை சொல்வேனே

விளக்கவுரை :

[ads-post]

4188. சொல்லவென்றால் நாவில்லை பாவுமில்லை துரைராஜ சுந்தரனே சொல்லக்கேளும்
வெல்லவே யானைமலை யடிவாரத்தில் மேன்மையுடன் சுனையொன்று குகைதானுண்டு
புல்லவே சுனையருகில் போகும்போது புகழான கல்லடியாஞ் சித்தரப்பா 
மல்லர்கள்போல் நூறுபேர் கொலுவிருப்பார் மகத்தான சுனையருகே காவலுண்டே 

விளக்கவுரை :


4189. உண்டான காவலுக்குள் அதிசயங்கள் வுத்தமனே சொல்லவென்றால் முடியாதப்பா
திண்டான கார்த்தவராயனப்பா திகழான சுனையினது படிதளத்தில்  
சண்டமென்ற வாயுதப்பாணியோடு சக்கரமும் வளைதடியும் கைபிடித்து
துண்டரிகமான வீரியன்தான் துப்புரவாய்க் காவலது இருப்பான்காணே

விளக்கவுரை :


4190. காணவே குளிகைகொண்டு செல்லும்போது கண்மணியே யுன்னையவர் வழிமறிப்பார்
பூணவே கார்த்தவனார் வீரியன்தான் புகழான வாயுதபாணியாக 
வேணவே யுத்தமது செய்யவென்று விருப்பமுடன் வருவாரைக்கண்டபோது
ஆணவங்கள் அதிகரித்து உன்னைக்கொல்ல வப்பனேவருவாரே யுண்மைதானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4181 - 4185 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4181. தானான ஆயக்கால் மண்டபத்தில் தகமையுள்ள கக்லடியாஞ் சித்தரப்பா
கோனான மண்டபத்தில் சமாதியுண்டு கோமானாம் தும்புரிஷியார்தாமும்
பானான பளிங்குமா மண்டபந்தான் பாங்கான மலைமீதில் இருக்கும்பாரு
தேனான ரிஷிமுனிவர் சித்தர்தாமும் தேற்றமுடன் கொலுக்கூடம் காப்பார்தாமே

விளக்கவுரை :


4182. கொலுவன மண்டபத்தில் அடியேன்தானும் கொப்பெனவே குளிகைகொண்டு இறங்கியல்லோ
வலுவான கல்லடியான் சித்தர்முன்னே வளப்பமுடன் குளிகையிட்டு யிறங்கிநின்றேன்
மெலுவான வார்த்தையது மிகவும்பேச மேன்மையுடன் என்மனதில் எண்ணங்கொண்டு
அலுவான சமாதிபக்கல் நின்றேன்யானும் அங்ஙெனவே கண்டாரே முனிவர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

4183. முனியான சித்தர்முனி ரிஷிகள்தாமும் மூர்க்கமுடன் என்மீதிற் சினமுங்கொண்டு
தொனியான வார்த்தையது சீறலாகி தோற்றமுடன் எந்தனையும் சபிக்கவென்று
பனிபோன்ற மலைமீதில் இருந்துமல்லோ பாங்குடனே புறப்பட்டார் ஆயிரம்பேர்
கனிவுடனே யவிர்களை யான்கண்டபோது கால்விழுந்து சாஷ்டாங்கஞ் செய்திட்டேனே

விளக்கவுரை :


4184. இட்டேனே சித்தர்முனி ரிஷிகளுக்கு எழிலுடனே யடிவணங்கி தெண்டனிட்டேன்
கிட்டிநின்ற எந்தன்மேல் கிருபைவைத்து கீர்த்தியுடன் யாரப்பா வென்றுகேட்க
திட்டமுடன் காலாங்கி நாதர்தம்மை திறமுடனே மனந்தனிலே நினைத்துக்கொண்டு
வட்டமுடன் குளிகைகொண்ட சீஷன்யானும் வாகுடனே மலைதேடி வந்தேன்பாரே

விளக்கவுரை :


4185. பார்த்தேனே யானைமலைக் காணவென்று பாங்கான குளிகைகொண்டு யிறங்கினேன் யான்
தீர்த்தமுடன் காசிபதி சென்றுயானும் திகழான காசிலிங்கந் தீர்த்தங்கொண்டு
ஆசையுடன் பூசைநைவேத்தியங்கள் வன்புடனே பதாம்புயத்தை யர்ச்சிப்பேன்யான்
சேர்த்துமே கரங்குவித்து வுரைத்தபோது சிறப்பான ரிஷியாரும் கிழ்ந்திட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4176 - 4180 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4176. சொன்னதொரு விதிமுறைகள் அனைத்தும்கூறி சுத்தமுடன் ஞானோபதேசமோதி
நன்னயமாய் வையகத்தில் வாழ்கவென்று நாதாந்தக் கண்மணியின் அருளைப்பெற்று
என்னாளுஞ் சித்தருக்கு முத்தனாக எழிலாக இருக்கவென்று வாசீர்மித்து  
பன்னவே பரப்பிமம் ஜோதிதன்னை புகட்டுவார் யுந்தனுக்குப் பண்பாய்த்தானே

விளக்கவுரை :


4177. தானான யின்னமொரு மார்க்கங்கேளு தகமையுள்ள புலிப்பாணி மைந்தாசொல்வேன்
தேனான தென்மதுரை வடமேற்கப்பா தெளிவான யானமலை யென்றொன்றுண்டு
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்கு சொன்னமார்க்கம்
பானான குருசொன்ன மொழிபடிக்கி பாலகனே குளிகையது கொண்டேன்பாரே 

விளக்கவுரை :

[ads-post]

4178. கொண்டேனே குளிகையது யானுங்கொண்டு கூரான யானைமலை காண்பதற்கு
அண்டமுடன் ஆகாயம் தான்பறந்து அழகான யானைமலை மீதிற்சென்றேன்
கண்டேனே வுச்சிதனில் மண்டபந்தான் காலான காலமது மூன்றுயோகம்
உண்டான சித்தரப்பா யங்கேயுண்டு வுத்தமனே கல்லடியாஞ் சித்தர்தாமே

விளக்கவுரை :


4179. கல்லான சித்தரப்பா மனேகமாண்பர் காசினியிலிருந்துவந்து மலைமேற்சென்றோம்
வல்லான யானைமலை வுச்சிதன்னில் வளமுடனே ஆயக்கால் மண்டபத்தில்
கொல்லரெனுஞ் சீஷர்களா மாயிரம்பேர் கூட்டமிட்டு வந்திருக்கக் கண்டேன்யானும்
வெல்லவே போகாது சித்தர்தம்மை வேகமுடன் தான்சபிப்பார் உறுதியாமே

விளக்கவுரை :


4180. உறுதியாம் மோனநிலைகொண்டசித்து மூதுலகில் பார்த்தவர்கள் யாருமில்லை
மருமமாம் வதீதமுதல் மகிமைகோடி வண்மையுள்ள சித்தர்களு மங்கேயுண்டு
நறுமனங்கள் கொண்டதொரு சித்துதம்மை நவிலவேமுடியாது மலைமேலப்பா
குறுமுனியாம் அகஸ்தியர்க்கு நேரதான கொற்றவர்கள் அங்கிருக்கக் கண்டேன்தானே

விளக்கவுரை :


Powered by Blogger.