போகர் சப்தகாண்டம் 4186 - 4190 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4186 - 4190 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4186. மகிழ்ந்தஇட்ட சித்தரென்னை யாசீர்மிக்க மகிழ்ச்சியுடன் அவர்பாதமஞ்சலித்தேன்
நெகிழ்ந்திட்ட ரிஷியாரும் என்னைப்பார்த்து நேர்மையுடன் மலைமீதில் வரலாமோசொல்
தவிழ்ந்திட்ட சிறுபாலா யென்னையிப்போ தன்மையுடன் தெரிசிப்பேனென்றுரைத்து
மகிழ்ந்திடவே ஞானோபதேசஞ்சொல்லி சட்டமுடன் மலைவளத்தை சொன்னார்பாரே

விளக்கவுரை :


4187. பாரப்பா காலாங்கி நாதர்பாலா பட்சமுடன் மலைவளத்தை யானுரைப்பேன்   
ஆரப்பா வெனைப்போலச் சொல்லப்போரார் வப்பனே யானுனக்கு யுறுதிசொல்வேன்
சீரப்பா எந்தனது போகநாதா சிறப்புடனே யானைமலை தீமைகேளும்
நேரப்பா மலைதனிலே யதீதமெத்த நேர்மையுடன் யாம்கண்டவரை சொல்வேனே

விளக்கவுரை :

[ads-post]

4188. சொல்லவென்றால் நாவில்லை பாவுமில்லை துரைராஜ சுந்தரனே சொல்லக்கேளும்
வெல்லவே யானைமலை யடிவாரத்தில் மேன்மையுடன் சுனையொன்று குகைதானுண்டு
புல்லவே சுனையருகில் போகும்போது புகழான கல்லடியாஞ் சித்தரப்பா 
மல்லர்கள்போல் நூறுபேர் கொலுவிருப்பார் மகத்தான சுனையருகே காவலுண்டே 

விளக்கவுரை :


4189. உண்டான காவலுக்குள் அதிசயங்கள் வுத்தமனே சொல்லவென்றால் முடியாதப்பா
திண்டான கார்த்தவராயனப்பா திகழான சுனையினது படிதளத்தில்  
சண்டமென்ற வாயுதப்பாணியோடு சக்கரமும் வளைதடியும் கைபிடித்து
துண்டரிகமான வீரியன்தான் துப்புரவாய்க் காவலது இருப்பான்காணே

விளக்கவுரை :


4190. காணவே குளிகைகொண்டு செல்லும்போது கண்மணியே யுன்னையவர் வழிமறிப்பார்
பூணவே கார்த்தவனார் வீரியன்தான் புகழான வாயுதபாணியாக 
வேணவே யுத்தமது செய்யவென்று விருப்பமுடன் வருவாரைக்கண்டபோது
ஆணவங்கள் அதிகரித்து உன்னைக்கொல்ல வப்பனேவருவாரே யுண்மைதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar