4181. தானான ஆயக்கால் மண்டபத்தில்
தகமையுள்ள கக்லடியாஞ் சித்தரப்பா
கோனான மண்டபத்தில்
சமாதியுண்டு கோமானாம் தும்புரிஷியார்தாமும்
பானான பளிங்குமா மண்டபந்தான்
பாங்கான மலைமீதில் இருக்கும்பாரு
தேனான ரிஷிமுனிவர்
சித்தர்தாமும் தேற்றமுடன் கொலுக்கூடம் காப்பார்தாமே
விளக்கவுரை :
4182. கொலுவன மண்டபத்தில்
அடியேன்தானும் கொப்பெனவே குளிகைகொண்டு இறங்கியல்லோ
வலுவான கல்லடியான்
சித்தர்முன்னே வளப்பமுடன் குளிகையிட்டு யிறங்கிநின்றேன்
மெலுவான வார்த்தையது
மிகவும்பேச மேன்மையுடன் என்மனதில் எண்ணங்கொண்டு
அலுவான சமாதிபக்கல்
நின்றேன்யானும் அங்ஙெனவே கண்டாரே முனிவர்தாமே
விளக்கவுரை :
[ads-post]
4183. முனியான சித்தர்முனி
ரிஷிகள்தாமும் மூர்க்கமுடன் என்மீதிற் சினமுங்கொண்டு
தொனியான வார்த்தையது சீறலாகி
தோற்றமுடன் எந்தனையும் சபிக்கவென்று
பனிபோன்ற மலைமீதில்
இருந்துமல்லோ பாங்குடனே புறப்பட்டார் ஆயிரம்பேர்
கனிவுடனே யவிர்களை
யான்கண்டபோது கால்விழுந்து சாஷ்டாங்கஞ் செய்திட்டேனே
விளக்கவுரை :
4184. இட்டேனே சித்தர்முனி
ரிஷிகளுக்கு எழிலுடனே யடிவணங்கி தெண்டனிட்டேன்
கிட்டிநின்ற எந்தன்மேல்
கிருபைவைத்து கீர்த்தியுடன் யாரப்பா வென்றுகேட்க
திட்டமுடன் காலாங்கி
நாதர்தம்மை திறமுடனே மனந்தனிலே நினைத்துக்கொண்டு
வட்டமுடன் குளிகைகொண்ட
சீஷன்யானும் வாகுடனே மலைதேடி வந்தேன்பாரே
விளக்கவுரை :
4185. பார்த்தேனே யானைமலைக்
காணவென்று பாங்கான குளிகைகொண்டு யிறங்கினேன் யான்
தீர்த்தமுடன் காசிபதி
சென்றுயானும் திகழான காசிலிங்கந் தீர்த்தங்கொண்டு
ஆசையுடன் பூசைநைவேத்தியங்கள்
வன்புடனே பதாம்புயத்தை யர்ச்சிப்பேன்யான்
சேர்த்துமே கரங்குவித்து
வுரைத்தபோது சிறப்பான ரிஷியாரும் கிழ்ந்திட்டாரே
விளக்கவுரை :