போகர் சப்தகாண்டம் 4231 - 4235 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4231. இருந்தாரே தசமாண்டு பத்துமாச்சு எழிலான சித்துவருங் காலமாச்சு
பொருந்தவே சமாதியது வெடித்துமல்லோ பொங்கமுடன் தேறையசித்துதாமும்
அருந்தவமுந் தான்தீர்ந்து வவனிமேலே வன்புடனே வெளியானார் சித்துதாமும்
வருந்தியே சீஷரென்ற மாண்பரெல்லாம் வண்மையுடன் அவர்பாதம் தொழுதிட்டாரே

விளக்கவுரை :


4232. தொழுதாரே தேறையசித்துதம்மை தொல்லுலகை விட்டதொருமாண்பரெல்லாம்
பழுதுபடத் திருமேனி காயந்தன்னை பண்புடனே தான்களித்து வஞ்சலித்து
அழுதுமே யவர்பாதம் பின்வணங்கி ஐயனே நாதாந்தசித்துரூபே
வழுவாது பொய்யுரையாக் காவலோனே வணங்கியே நமஸ்கரித்து பணிந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

4233. பணிந்திட்ட மாண்பரெல்லாம் முகம்மலர்ந்து பரமவொளி நாதாந்தசித்துரூபே
கணிந்திட்ட வசரீரிவாக்குபோலே கர்த்தனே வற்புதங்கள் முடிந்துதாச்சு
துணிந்திடவே வாக்கதுவும் பொய்யென்றில்லை துப்புறவாய் வையகத்தில் மெய்யேயாச்சு
தணிந்திடவே சீஷவர்க்கம் மனதுவந்து சட்டமுடன் ஆசீர்மம் செய்வீர்தாமே

விளக்கவுரை :


4234. தாமான யின்னமொரு மார்க்கங்கேளும் தகமையுள்ள சீஷவர்க்க மாணபாரே
கோமான யெனதையர் அகஸ்தியனார்தன்னை கொற்றவனார்தம்மைவிட்டு யான்பிரிந்து
சாமான முள்ளதொரு ஞானோபதேசம் சட்டமுடன் யானறிந்து பிரிந்துவிட்டேன்
நாமான மாகவல்லோசமாதிகொண்டு நாயகனே பத்தாண்டு இருந்திட்டேனே

விளக்கவுரை :


4235. இருந்தேனே இன்னும்வந்து யானும்கண்டேன் எழிலான சீஷவர்க்கமென்ன சொல்வேன்
பொருந்தவே சொற்பனமும் யானுங்கண்டேன் பொங்கமுடன் மறுபடியும் சமாதிக்கேக
வருந்தியே பராபரத்தின் செயலினாலே வன்மையுள்ள சொற்பனமும் மெய்யேயாகும்
திருந்தியே யான்கண்ட சொற்பனத்தில் திறமாக நடப்பதுவும் வுண்மையாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4226 - 4230 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4226. போடவே கற்பாறைமூடிப்பின்பு பொங்கமுடன் சமாதியுடன் நிற்கவேண்டும் 
நீடவே நான்வருகுங்காலந்தன்னில் நிலையான பாறைதனில் எழுத்துதோன்றும்
கூடவே வாண்டுவது பத்துக்குள்ளே கொப்பெனவே யான்வருகுங்காலந்தன்னில்
சாடவே நர்மதா மலைதானப்பா சட்டமுடன் தங்கநிறமாகும்பாரே

விளக்கவுரை :


4227. தங்கமாம் அதிலிருக்கும் சித்தரெல்லாம் சட்டமுடன் மலையைவிட்டுக் கீழிறங்கி
அங்கமுடன் அஞ்சலிகள் மிகவுஞ்செய்து வன்புடனே சமாதியிடம் வந்துநிற்பார்
புங்கசித்தி எட்டுமது பூண்டுகொண்டு புகழான யோகமென்ற ஞானம்கொண்டு
சங்கமென்ற ஞானோபதேசத்தோடும் சார்புடனே சமாதியிடம் நிற்பார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

4228. பார்க்கவென்றால் இன்னம்வெகுவதிசயங்கக் பாருலகில் தானடக்கும் மகிமைசொல்வேன்
தீர்க்கமுடன் வடகோடியாறுதானும் திகழுடனே தென்திசையிலிருந்துமல்லோ
மூர்க்கமுடன் வடகோடி கானகத்தில் முத்தமுடன் கான்பாபுவென்றுசொன்னார்
ஏர்க்கவே காணாறுநதிகளெல்லாம் எழிலுடனே இப்படியே நடக்குந்தானே

விளக்கவுரை :


4229. தானான சித்துமுனி ரிஷிகளெல்லாம் தண்மையுடன் சமாதியுட பக்கல்வந்து
கோனான எனதையர் அகஸ்தியர்தம்மை கொற்றவனார் குருபதத்தை தாம்நினைத்து
தேனான சித்தர்முனி வருவதற்கோ தேசமெல்லாங் கண்டுமனங்களிப்பதெப்போ
பானான சமாதியது பாறைதானும் பாருலகில் வெடிப்பதெப்போ வென்றிட்டாரே  

விளக்கவுரை :


4230. இட்டதொரு காலமது சென்றபின்பு எழிலான சித்துவரும் நாளுமாச்சு
சட்டமுடன் மலைகளெல்லாம் தங்கமாச்சு சார்பான பாறையின்மேல் எழுத்துண்டாச்சு
குஷ்டமுடன் நோயுள்ள பிணியோரெல்லாம் குறைநோயுந்தீர்ந்துமல்லோ குசலமானார்
திட்டமுடன் சீஷவர்க்கமானோரெல்லாம் சிறப்புடனே சமாதியிடம் இருந்தார்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4221 - 4225 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4221. நன்றான சமாதிக்குப் போரேனப்பா நலமுடனே நீங்களெல்லாம் மனதுவந்து
குன்றான நர்மதாமலையைநாடி கொற்றவரெ வருகவென்று விடையுந்தந்தார்
வென்றிடவே தேறையர் சித்துதாமும் வீரமுடன் நர்மதா மலையைத்தேடி
சென்றாரே மலையடிவாரந்தன்னில் சிறப்புடbனெ தானமர்ந்தார் முனிவர்தாமே

விளக்கவுரை :


4222. முனியான சித்துரிஷி சொரூபர்தானும் மூதுலகில் ஆசையது விட்டகன்று
பனிபோன்ற நாடுவலம் சென்றேயேகி பாங்கான மலைவளத்தை யடுத்தசித்து
சனிபிடித்தகதையைப்போல சொரூபர்தாமும் சாங்கமுடன் மனதுமிகத்தான்தளர்ந்து
நளியான சமாதிக்குச் செல்லவென்று நாட்டமுடன் சித்தரவர் நின்றிட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

4223. நின்றாரே சித்துமுனி சொரூபர்தானும் நிலையான சமாதியது குழிதான்வெட்டி
தென்றலுடன் வாயுவது வுட்செல்லாமல் திறமானகல்தரையும் தானமைத்து
சன்னமதால் ஒருபக்கந்துவாரமிட்டு சட்டமுடன் சமாதிக்கு இடமுந்தேடி
பன்னவே ரிஷியாரு முன்னேநின்று பாருலகில் சீஷருக்கு மதிசொல்வாரே

விளக்கவுரை :


4224. மதியான சீஷவர்க்க மெந்தன்பாலா மகத்தான லோகமது வதிசயங்கள்
பதியான பாருலகில் சொல்லொண்ணாது பட்சமுடன் தேறைய முனிவர்தாமும்
விதியான விதிப்படியே சீஷருக்கு விருப்பமுடன் தாமுரைப்பார் சித்தர்தாமும்
துதியுடனே சீஷர்களுமஞ்சலித்து தோற்றமுடன் எதிராக நின்றார்பாரே

விளக்கவுரை :


4225. பாரேதான் சீஷவர்க்கம் நிற்கும்போது பாலகனே என்தோழா பாக்கியவானே
நேரேதான் கல்லறைக்குள் இறங்குவேன்யான் நேரான கற்பாறைமேலேமூடி
சீரேதான் சமாதியது பூண்டபோது சிறப்புடனே பால்பழமுந்தருகவென்று
நீரேதான் மண்டலங்கடந்தபின்பு நீட்சியுடன் அவ்வழியைமூடிப்போடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4216 - 4220 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4216. ஊதினார் தேறையமுனிவர்தானும் ஓகோகோ நாதாக்கள்பின்னுமல்லோ  
சாதிகெட்ட பையலவன் பின்னும்வந்து சட்டமுடன் துருத்திகொண்டு வூதுகிறார்பார்
பாதிமதி சடையணிந்த தம்பிரான்போல் பட்சமுடன் தாமுரைப்பார் அகஸ்தியார்தாமும்
நீதிமுறையில்லையோதான் சித்தருக்கு நிஷ்டூரந்தானதிகம் வுரைத்தார்பாரே

விளக்கவுரை :


4217. பாரேதான் சித்தர்களும் உரைக்கும்போது பான்மையுடன் அகத்தியனார் சித்துதாமும்
சீரேதான் தேறையமுனிவர்தம்மை சிறப்புடனே செய்வதற்கு நீதியுண்டோ  
நேரேதான் முக்காலில் கண்டுமேதான் நேர்மையுடன் தணலதனை நிறுத்தவென்று
கூரேதான் விண்ணப்பம் மொழியனந்தம் குறிப்புடனே கேட்டாரே முனிவர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

4218. முனியான வகஸ்தியனார் முனிவர்தாமும் முறையோடுங் குறையோடும் கேட்டசீஷன்
தனியான தேறையசித்துதாமும் தகமையுடன் சமாதிக்குப்போகும் மார்க்கம்
பணியான நர்மதா மலையின்மீது பான்மையுடன் தேறையமுனிவர்தாமும்
நனியான சமாதிக்கு யேகவென்று நாட்டமுடன் தேறையர் வெளிப்பட்டாரே

விளக்கவுரை :


4219. பட்டாரே தேறையமுனிவர்தானும் பாருலகில் சுமுசாரவாழ்க்கையற்று
விட்டகுறை இருந்ததொரு நேர்மையாலே விருப்பமுடன் வுலகத்தில் ஆசைவிட்டு
சட்டமுடன் சீஷர்களைத் தாமழைத்து சதாகாலம் வுலகுதனில் இருந்துமென்ன
திட்டமுடன் குருவணக்கம் கொண்டுமென்ன திறளான வுபதேசம் ஒன்றும்காணே

விளக்கவுரை :


4220. காணேனே வுபதேசம் வொன்றுமில்லை காசினியி லிருந்தாலும் பயனுமில்லை
பூணவே வரைகோடி மகிமைவித்தை புகழாகக் கற்றாலும் ஒன்றுமில்லை
வேணபடி யிதிகாச புராணவேதம் வெட்கமுடனாயறுவேதந்தானும் 
தோணவே கண்டாலுமொன்றுமில்லை துப்புறவாய் சமாதிக்குப்போகநன்றே

விளக்கவுரை :


Powered by Blogger.