4221. நன்றான சமாதிக்குப்
போரேனப்பா நலமுடனே நீங்களெல்லாம் மனதுவந்து
குன்றான நர்மதாமலையைநாடி
கொற்றவரெ வருகவென்று விடையுந்தந்தார்
வென்றிடவே தேறையர்
சித்துதாமும் வீரமுடன் நர்மதா மலையைத்தேடி
சென்றாரே மலையடிவாரந்தன்னில்
சிறப்புடbனெ தானமர்ந்தார் முனிவர்தாமே
விளக்கவுரை :
4222. முனியான சித்துரிஷி
சொரூபர்தானும் மூதுலகில் ஆசையது விட்டகன்று
பனிபோன்ற நாடுவலம்
சென்றேயேகி பாங்கான மலைவளத்தை யடுத்தசித்து
சனிபிடித்தகதையைப்போல
சொரூபர்தாமும் சாங்கமுடன் மனதுமிகத்தான்தளர்ந்து
நளியான சமாதிக்குச்
செல்லவென்று நாட்டமுடன் சித்தரவர் நின்றிட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
4223. நின்றாரே சித்துமுனி
சொரூபர்தானும் நிலையான சமாதியது குழிதான்வெட்டி
தென்றலுடன் வாயுவது
வுட்செல்லாமல் திறமானகல்தரையும் தானமைத்து
சன்னமதால்
ஒருபக்கந்துவாரமிட்டு சட்டமுடன் சமாதிக்கு இடமுந்தேடி
பன்னவே ரிஷியாரு
முன்னேநின்று பாருலகில் சீஷருக்கு மதிசொல்வாரே
விளக்கவுரை :
4224. மதியான சீஷவர்க்க
மெந்தன்பாலா மகத்தான லோகமது வதிசயங்கள்
பதியான பாருலகில்
சொல்லொண்ணாது பட்சமுடன் தேறைய முனிவர்தாமும்
விதியான விதிப்படியே
சீஷருக்கு விருப்பமுடன் தாமுரைப்பார் சித்தர்தாமும்
துதியுடனே
சீஷர்களுமஞ்சலித்து தோற்றமுடன் எதிராக நின்றார்பாரே
விளக்கவுரை :
4225. பாரேதான் சீஷவர்க்கம் நிற்கும்போது பாலகனே என்தோழா பாக்கியவானே
நேரேதான் கல்லறைக்குள்
இறங்குவேன்யான் நேரான கற்பாறைமேலேமூடி
சீரேதான் சமாதியது பூண்டபோது
சிறப்புடனே பால்பழமுந்தருகவென்று
நீரேதான் மண்டலங்கடந்தபின்பு
நீட்சியுடன் அவ்வழியைமூடிப்போடே
விளக்கவுரை :