4216. ஊதினார் தேறையமுனிவர்தானும்
ஓகோகோ நாதாக்கள்பின்னுமல்லோ
சாதிகெட்ட பையலவன்
பின்னும்வந்து சட்டமுடன் துருத்திகொண்டு வூதுகிறார்பார்
பாதிமதி சடையணிந்த
தம்பிரான்போல் பட்சமுடன் தாமுரைப்பார் அகஸ்தியார்தாமும்
நீதிமுறையில்லையோதான்
சித்தருக்கு நிஷ்டூரந்தானதிகம் வுரைத்தார்பாரே
விளக்கவுரை :
4217. பாரேதான் சித்தர்களும் உரைக்கும்போது பான்மையுடன் அகத்தியனார் சித்துதாமும்
சீரேதான் தேறையமுனிவர்தம்மை
சிறப்புடனே செய்வதற்கு நீதியுண்டோ
நேரேதான் முக்காலில்
கண்டுமேதான் நேர்மையுடன் தணலதனை நிறுத்தவென்று
கூரேதான் விண்ணப்பம்
மொழியனந்தம் குறிப்புடனே கேட்டாரே முனிவர்தாமே
விளக்கவுரை :
[ads-post]
4218. முனியான வகஸ்தியனார்
முனிவர்தாமும் முறையோடுங் குறையோடும் கேட்டசீஷன்
தனியான தேறையசித்துதாமும்
தகமையுடன் சமாதிக்குப்போகும் மார்க்கம்
பணியான நர்மதா மலையின்மீது
பான்மையுடன் தேறையமுனிவர்தாமும்
நனியான சமாதிக்கு யேகவென்று
நாட்டமுடன் தேறையர் வெளிப்பட்டாரே
விளக்கவுரை :
4219. பட்டாரே தேறையமுனிவர்தானும்
பாருலகில் சுமுசாரவாழ்க்கையற்று
விட்டகுறை இருந்ததொரு
நேர்மையாலே விருப்பமுடன் வுலகத்தில் ஆசைவிட்டு
சட்டமுடன் சீஷர்களைத்
தாமழைத்து சதாகாலம் வுலகுதனில் இருந்துமென்ன
திட்டமுடன் குருவணக்கம்
கொண்டுமென்ன திறளான வுபதேசம் ஒன்றும்காணே
விளக்கவுரை :
4220. காணேனே வுபதேசம்
வொன்றுமில்லை காசினியி லிருந்தாலும் பயனுமில்லை
பூணவே வரைகோடி மகிமைவித்தை
புகழாகக் கற்றாலும் ஒன்றுமில்லை
வேணபடி யிதிகாச புராணவேதம்
வெட்கமுடனாயறுவேதந்தானும்
தோணவே கண்டாலுமொன்றுமில்லை
துப்புறவாய் சமாதிக்குப்போகநன்றே
விளக்கவுரை :