போகர் சப்தகாண்டம் 4211 - 4215 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4211 - 4215 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4211. ஊதவே மலையெல்லாம் தங்கமாச்சு வுத்தமனே வதிலிருந்த தவசிமார்கள்
மாதவங்கள் செய்கின்ற ரிஷிகள்தாமும் மகத்தான வடவாக்கினி யனல்கொள்ளாமல்
காதவங்கள் மிகவாகி ரிஷியார்தாமும் கைலங்கிரி மலைதானும் இடங்கொள்ளாமல்
பாதவத்தில் மிகுந்ததொரு வகஸ்தியர்முன்னே பொங்கமுடன் முறையமது செய்திட்டாரே

விளக்கவுரை :


4212. முறையான சித்துமுனிரிஷிகள்தாமும் மூர்க்கமுடன் ஓடிவந்துவகஸ்தியனார்முன்னே
சிறைமீண்ட சித்தனாம் தேறைதானும் தேற்றமுடன் மலையடிவாரந்தன்னில்
திறையான தீமூட்டி துருத்திகொண்டு திறமுடனே மலைதனையே தீயால்தாக்க
குறையான சித்தர்முனி ரிஷிகள்தாமும் குடியிருக்க எங்களுக்கு இடமில்லைதாமே

விளக்கவுரை :

[ads-post]

4213. தாமான தேறைமுனி சித்துதம்மால் தரணியெல்லாம் சித்துமயம் ஆகிப்போகும்
சாமான மலைகளெல்லாந் தங்கமானால் தாரிணியில் ஒருவருக்கோர் மரிப்போருண்டோ
கோமான் குருவேது சீஷரேது குவலயத்தில் ஒருவருந்தான் இல்லைகண்டீர்
நாமான வாகவல்லோ கூறிவிட்டோம் நாதாந்த சித்தொளிவைக் காப்பீர்தாமே

விளக்கவுரை :


4214. காக்கவென்று சொல்லியல்லோ கரங்குவித்து கைலாசவகஸ்தியருக்கு யிதவுகூறி
ஆக்குவது அழிப்பதுவும் உம்மாலாகும் வப்பனே கடாட்சமதுசெய்யவென்ன
நோக்கமது கொண்டுமல்லோ அகஸ்தியர்தாமும் நொடிக்குள்ளே சினமதுவும் அதிகமாகி
தூக்கியே தேறைய சித்துதம்மை துப்புரவாய் கிழித்தெறிந்து போட்டிட்டாரே

விளக்கவுரை :


4215. போட்டாரே யகஸ்தியனார் சித்துதம்மை பொங்கமுடன் தம்பதிக்குப்போனாரப்பா
நீட்டமுடன் அகஸ்தியரும் போனபின்பு நேரான தேறையசீஷரங்கே
கூட்டமுடன் வந்திருந்து மூலிதன்னால் கொப்பெனவே எழுப்பிவிட்டார் சித்துதம்மை
வாட்டமுடன் மறுபடியும் சித்துதாமும் வளமையுடன் முன்போலே யூதினாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar