போகர் சப்தகாண்டம் 4206 - 4210 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4206 - 4210 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4206. சிங்கமாம் சித்தர்முனி மெச்சும்பாலா சிவயோகாவருள்பாலா தேகாமோகா
துங்கமே மெய்ப்பொருளே ஞானதீபா சுடர்மணியே கதிரொளியே சூட்சபாதா
தங்கமே சடாட்சரத்தின் மோனவானே தயாபரமே தயாநிதியே சாருந்தீபா
புங்கிசித்தி யெட்டுரிய போகவானே புகழான மகமேரே யென்றார்தாமே

விளக்கவுரை :


4207. என்றாரே வகஸ்தியரும் மெச்சியல்லோ எழிலான தேறையமுனிவருக்கு
நன்றான பொருளெல்லாம் மிகவுரைத்து நலம்பெறவே ஞானோபஞ்செய்தாரங்கே
குன்றான மலைதனிலே யிருக்குமூலி குவலயத்தில் இறந்தவரை எழுப்புமூலி
வென்றிடவே மூலிதனை தேரையருக்கு விருப்பமுடன் ஞானோபம் செய்தார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

4208. பாரேதான் பொன்மூலி வுளவுஞ்சொல்லி பாங்கான பொன்விளையும்நாடுசொல்லி
நேரேதான் கருவிகரணாதியெல்லாம் நேர்மையுடன் தேறையர்முனிவர்தானும்
சீரேதான் கற்றறிந்து கொண்டபின்பு சிறப்புடனே இறுமாப்பு யதிகமாகி
வேரேதான் அகஸ்தியரை விட்டுநீங்கி விருப்பமுடன் மலைவளத்தில் சென்றார்தாமே

விளக்கவுரை :


4209. தானான வாரணமாம் மலையைக்கண்டு தண்மையுடன் தேறையர்முனிவர்தாமும்
கோனான வகஸ்தியரை விட்டுநீங்கி குருமொழியைத் தான்கடந்தசித்துதாமும்
தேனான வித்தையெல்லா மறிந்துகொண்டு தேற்றமுடன் லோகமெல்லாஞ் சித்துசெய்ய
மானான காசியென்ற மலைவாரத்தில் மார்க்கமுடன் தான்சென்றார் முனிவர்தாமே

விளக்கவுரை :


4210. முனியான தேறையர் சித்துதாமும் மூர்க்கமுடன் தனக்கிசைந்த சீஷர்தம்மை
தனியாக ஞானோபம் செய்துமல்லோ தகமையுடன் மூலியெல்லாம் காண்பித்தாராம்
கனியான தேறைய முனிவர்தாமும் நலமான பொன்விளையும் மூலியெல்லாம்
பனியான மலைமேலே பூசியேதான் பழுக்கவே துருத்திகொண்டு வூதினாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar