போகர் சப்தகாண்டம் 4396 - 4400 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4396. இட்டாரே சித்துமுனி வந்தபோது எழிலான சீஷவர்க்கங்கூட்டங்கூடி
திட்டமுடன் அவர்பாதம் தொழுதிட்டார்கள் சிறப்பான மாண்பரெல்லாம் வணங்கிநின்றார்
சட்டமுடன் சித்துமுனி சொன்னவாக்கு தாரணியில் மெய்யாச்சு பார்க்கும்போது
வட்டமுடன் கடுவெளியார் சித்துதாமும் வண்மையுடன் லோகவதிசயங் கேட்டாரே

விளக்கவுரை :


4397. கேட்டாரே லோகத்தின் புதுமையெல்லாம் கிருபையுடன் சீஷவர்க்கந்தன்னைநோக்கி
நீட்டமுடன் சமாதிக்கு ஏகுமுன்னே நீதியுள்ள சிறுபாலன் போகநாதன்
வாட்டமாங் காலாங்கி சீடனப்பா வளமான போகரிஷிநாதன்தானும்
ஆட்டமுடன் குளிகையது பூண்டுகொண்டு வன்புடனே வந்தசித்து எங்கென்றாரே

விளக்கவுரை :

[ads-post]

4398. எங்கென்று கேட்கையிலே போகநாதன் எழிலான குளிகையது பூண்டுகொண்டு
அங்ஙனவே சித்துவனம் நினைக்கும்போது அழகான போகர்முனி வந்திட்டாராம்
புங்கமுடன் சித்துமுனி ரிஷியார்தாமும் புகழான போகரிஷிநாதருக்கு
துங்கமுடன் ஆசீர்மம்மிகவுஞ் செய்து துப்புரவாய் போகருக்கு வளஞ்சொன்னாரே

விளக்கவுரை :


4399. சொன்னாரே கண்மணியே போகநாதா துறைகோடிவரைகோடி காலமப்பா
மன்னான பர்வதமே யுன்னைக்கண்டு மார்க்கமுடன் முப்பதுவாண்டுமாச்சு
தென்னாகேள் சீனபதிக்குடையவேந்தே சிறப்பாக வுன்னையான் கண்டபோதே
முன்னோராங் காலாங்கி நாதசித்து மொழிந்ததொருவார்த்தை எதிரில்லைதானே

விளக்கவுரை :


4400. தானான யின்னமொரு வயனங்கேளு தகமையுள்ள டில்லிக்கு தென்கிழக்கே
கோனான அழகாபுரியென்னுமூராம் குறிப்பான பதியொன்று குண்ணுமுண்டு
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தோற்றமுடன் புலிப்பாணி மைந்தாகேளு
பானான காலாங்கி கிருபையாலே பாலகனே குளிகைகொண்டு சென்றேன்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4391 - 4395 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4391. கூறுவார் சித்துமகாரிஷியார்தாமும் குணமான சித்தர்வர்க்கமானபேர்க்கு
மாறுடைய தேகமது வருகும்போது மகத்தான வையகத்திலிடியுணஃடாகும்
வீறுடைய மேகமது திரண்டுமேதான் விரானமாரியது இல்லாமற்றான்
ஆறுதலம் தான்முழுகில் வதிதம்பாரு அவனியெல்லாம் இடியென்ற சத்தமாமே

விளக்கவுரை :


4392. சத்தமாங் கோடையிடிபோலேகாணும் தகமையுள்ள நீரிடியும் நெருப்பிடியுங்காணும்
நித்தமுமிடிமுழக்கமதிகமாகும் நீடாழி யுலகமெலாம் தத்தளிக்கும்
வத்தியே சமுத்திரமும் சலமுங்காணார் வாரிதியும் திசைமாறி நடுங்கும்பாரு
புத்தியுள்ள சீடர்களே மகிமைதோன்றும் புகழான சித்துவரும் நாளுமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

4393. நாளான காலமதில் வதிசயங்கள் நாடெல்லாம் சென்னெல்கள் விளையும்பாரு
காடான பூண்டதுவும் பூர்க்கும்பாரு தருவான மூலிகைகள் கண்ணிற்றோற்றும்
மாளாத மாண்பரெல்லாம் சிவயோகங்கள் மானிலத்தில் மிகபேசி வன்மைசொல்வார்
தூளான காயகற்ப மூலிதானும் துப்புறவாய் கண்ணிற்குத் தோன்றும்பாரே

விளக்கவுரை :


4394. பாரேதான் அதிசயங்கள் மிகநடக்கும் பாரினிலே சித்துவருங்காலந்தன்னில்
நேரேதான் மேற்குமுகந்தன்னிலப்பா நிலையான சூரியனும் உதயமாவான்
சேரேதான் அருந்துதிகள் யாவுந்தானும் செங்கையால் தான்தொடவே கிட்டிருக்கும்
ஊரேதான் குடிபடைகள் யாவுந்தானும் வுத்தமர்கள் எந்தனையும் நினைப்பார்தானே

விளக்கவுரை :


4395. நினைக்கையிலே யான்வருகுங் காலந்தன்னில் நீதியுடன் சமாதியது வெடிக்கும்பாரு
புனைமேவுஞ் சமாதியது வெடிக்கும்போது புகழான ஜெகஜோதி தோற்றும்பாரு
வினைபோன்ற சடலமதுவெளியேயேகி விருப்பமுடன் சித்துமுனி வந்துமேதான்
முனையான மூதுலகோர் நடுநடுங்க வுத்தமரும் வெளிதனிலே வந்திட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4386 - 4390 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4386. தானான போகரிஷி நாதாகேளும் தாரிணியிலிருப்பதில் பலனொன்றில்லை
தேனான மனோன்மணியாள் கிருபையாலே தேற்றமுட னுகாந்தவரை யதிசயங்கள்
கோனான குருசொன்ன வாக்கியம்போல் குவலயத்தி லனேகவித்தை யானுங்கண்டேன்
பானான பாருலகில் இருந்துமென்ன பாரைவிட்டு நீங்குவது நலமென்றாரே

விளக்கவுரை :


4387. நலமான வார்த்தையது மிகவுங்கூறி நன்மையுடன் கடுவெளியார் சித்துதாமும்
பலமான தேகமதை நம்பொண்ணாது பாரினிலே இருந்தவர்கள் யாருமில்லை
குலமான பதியைவிட்டு சிலதுகாலம் கொற்றவனே சாதிதனிலிருப்பேனென்று
தலமுடனே கடுவெளியார் சித்துதாமும் சட்டமுடன் போகரிஷிக்குரைத்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

4388. உரைக்கவே சமாதிசென்று வருகுமட்டும் உத்தமனே நீயுமல்லோ வன்புகூர்ந்து
திரைக்கவே சமாதிவிட்டு வருகும்போது தீர்க்கமுடன் உந்தனையும் காணலாகும்
குறையகற்றி யுந்தனுக்கு வாசீர்மங்கள் குறையாமல் மனதுவந்து கூறுவேன்யான்
வரையாது வாக்கதுவும் பொய்யாமற்றான் வன்மையுடன் உந்தனுக்கு போதிப்பேனே

விளக்கவுரை :


4389. போகித்து கடுவெளியார் சித்துதாமும் பொங்கமுடன் சீடருக்குத் தாமுரைத்து
ஆதித்தன் வந்துதிக்கும் வேலைதன்னில் வன்பான சமாதியிட பக்கல்சென்று
வாதித்து சீடருடன் விடையும்பெற்று வளமான குழிதனிலே இறங்கியல்லோ
பேதித்து பாறைதன்னை சீடருக்கு பிரியமுடன் மூடவென்று விடைதந்தாரே

விளக்கவுரை :


4390. தந்தாரே சித்துமகாரிஷியாசர்தாமும் தகமையுடன் சீஷவர்க்கமானபேர்க்கு
விந்தைதனை மிகவுரைத்து சித்துதாமும் விருப்பமுடன் சீடருக்கு வதிதஞ்சொல்லி
அந்தமுடன் நான்வருகுங்காலந்தன்னில் அதிசயங்கள் மிகநடக்குமென்றுசொல்லி
சிந்தனையாய்த்தாமுரைத்து மண்ணிற்சென்று சிறப்பான அசரீரிகூறுவாரே   

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4381 - 4385 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4381. கேட்கையிலே கடுவெளியார் சித்துதாமும் கெவனமுடன் பூர்விக்கியானத்தாலே
வேட்கமுடன் காலாங்கி சீடனல்லோ வெளிப்பட்டார் குளிகைகொண்டுசீனம்விட்டு
வாட்கமல வாவுத்தில் வீற்றிருக்கும் வண்மையுள்ள கடுவெளியார் சித்துமுன்னில்
ஆட்படைகளில்லாமல் ரிஷியார்தாமும் அவனிதனில் குளிகைகொண்டு இறங்கினாரே

விளக்கவுரை :


4382. இறங்கியே குளிகஐவிட்டு சித்துதாமும் எழிலான கடுவெளியார் முன்னேவந்து
திறமுடனே போகரிஷிமுனிவர்தாமும் தீர்க்கமுடன் கடுவெளியார்க் கஞ்சலித்து
அறமுடைய தானமது மிகவும்பூண்டு வன்புடனே கடுவெளியார் சித்தருக்கு
வுறமுடனே வணக்கமது மிகவும்பூண்டு வுத்தமனார் போகரிஷி பணிந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

4383. பணியவே கடுவௌஇயார் சித்தருக்கு பட்சமுட னஞ்சலிகள் மிகவுஞ்செய்து
துணிவுடனே போகரிஷி முனிவர்தாமும் துப்புறவாய்க் கடுவெளியார் தம்மைக்காண
அணியான வாசீர்மந்தான் கொடுத்து வன்பஉடனே பக்கமது சேர்வைகொண்டு
பணியான கண்மணியே போகநாதா மண்டலத்தில் மங்களா வென்றிட்டாரே   

விளக்கவுரை :


4384. என்றிடவே  போகமுனி ரிஷியார்தாமும் எழிலான மங்களாகரமேயென்று
சென்றிடவே பவளமது அடியேன்பூண்டு சேனைபதி திரள்கூட்டஞ் சீனஞ்சென்றேன்
வென்றிடவே சீனபதி மார்க்கத்தார்க்கு விருப்பமுடன் பவளமென்ற காடுரைத்தேன்
இன்றுமுதல் தங்களது வாசீர்மத்தால் யெழிலான சீனபதி சுகமென்றாரே

விளக்கவுரை :


4385. என்றுமே போகரிஷி முனிவர்தாமும் எழிலான வதிசயங்கள் மிகவுங்கூறி
குன்றின் மேற்சந்திரனும் குவலயத்தில் குத்தெழுந்த பாலனைப்போல் கூறலாகி
அன்றுமே கடுவெளியார் சித்தருக்கு வன்புடனே வார்த்தையது மிகவுங்கூறி
இன்பமுடன் தாமிருந்தார் ரிஷியார்தாமும் எழிலான கடுவெளியார் துன்னேதானே

விளக்கவுரை :


Powered by Blogger.