4391. கூறுவார்
சித்துமகாரிஷியார்தாமும் குணமான சித்தர்வர்க்கமானபேர்க்கு
மாறுடைய தேகமது வருகும்போது
மகத்தான வையகத்திலிடியுணஃடாகும்
வீறுடைய மேகமது
திரண்டுமேதான் விரானமாரியது இல்லாமற்றான்
ஆறுதலம் தான்முழுகில்
வதிதம்பாரு அவனியெல்லாம் இடியென்ற சத்தமாமே
விளக்கவுரை :
4392. சத்தமாங் கோடையிடிபோலேகாணும்
தகமையுள்ள நீரிடியும் நெருப்பிடியுங்காணும்
நித்தமுமிடிமுழக்கமதிகமாகும்
நீடாழி யுலகமெலாம் தத்தளிக்கும்
வத்தியே சமுத்திரமும்
சலமுங்காணார் வாரிதியும் திசைமாறி நடுங்கும்பாரு
புத்தியுள்ள சீடர்களே
மகிமைதோன்றும் புகழான சித்துவரும் நாளுமாச்சே
விளக்கவுரை :
[ads-post]
4393. நாளான காலமதில் வதிசயங்கள்
நாடெல்லாம் சென்னெல்கள் விளையும்பாரு
காடான பூண்டதுவும்
பூர்க்கும்பாரு தருவான மூலிகைகள் கண்ணிற்றோற்றும்
மாளாத மாண்பரெல்லாம்
சிவயோகங்கள் மானிலத்தில் மிகபேசி வன்மைசொல்வார்
தூளான காயகற்ப மூலிதானும்
துப்புறவாய் கண்ணிற்குத் தோன்றும்பாரே
விளக்கவுரை :
4394. பாரேதான் அதிசயங்கள்
மிகநடக்கும் பாரினிலே சித்துவருங்காலந்தன்னில்
நேரேதான் மேற்குமுகந்தன்னிலப்பா
நிலையான சூரியனும் உதயமாவான்
சேரேதான் அருந்துதிகள்
யாவுந்தானும் செங்கையால் தான்தொடவே கிட்டிருக்கும்
ஊரேதான் குடிபடைகள்
யாவுந்தானும் வுத்தமர்கள் எந்தனையும் நினைப்பார்தானே
விளக்கவுரை :
4395. நினைக்கையிலே யான்வருகுங்
காலந்தன்னில் நீதியுடன் சமாதியது வெடிக்கும்பாரு
புனைமேவுஞ் சமாதியது
வெடிக்கும்போது புகழான ஜெகஜோதி தோற்றும்பாரு
வினைபோன்ற சடலமதுவெளியேயேகி
விருப்பமுடன் சித்துமுனி வந்துமேதான்
முனையான மூதுலகோர் நடுநடுங்க
வுத்தமரும் வெளிதனிலே வந்திட்டாரே
விளக்கவுரை :