போகர் சப்தகாண்டம் 4511 - 4515 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4511. தேவராம் ரிஷிமுனிவர்நாதர்தாமும் தேற்றமுடன் செம்புரவி தன்னைப்பார்த்து
யாவலுடன் சீனபதிமார்க்கத்தோர்கள் வன்பாகச் செய்துவைத்த புரவிதன்னை
மேவவே குளிகையது வேகந்தன்னை விருப்பமுடன் கண்டல்லோ மிகக்களித்து
தாவலுடன் புரவிக்கு வுதேசங்கள் சட்டமுடன் தான்கொடுத்தார் ரிஷியார்தாமே

விளக்கவுரை :


4512. தானான புரவிக்கு மகிமைசொன்னார் தண்மையுள்ள வசுவினியாந்தேவர்தானும்
கோனான வுபதேசம் என்னவென்றால் கொற்றவனார் போகரிஷிவுத்தாரந்தான்
தேனான செம்புரவி கேட்பதற்கு செப்பினார் தேவரிஷிமுனிவர்தானும்
பானான வுலகமெலாம் சுத்தும்போது பண்பாக நில்லென்றால் நிற்கவேண்டும்

விளக்கவுரை :

[ads-post]

4513. வேண்டுமே போவென்றால் போகவேண்டும் விருப்பமுடன் வீதிகளில் நிற்கவென்றால்
தூண்டுமிகக் கருமான பஞ்சதாதும் தொட்டவுடன் அசைவற்று நிற்கவேண்டும்
தாண்டியே செல்லாமல் போகர்வாக்கு தட்டாமல் மகிமைதனை யறியவேண்டும்
பாண்டுடனே வெகுகாலமிருக்கவென்று வன்புடனே வரமதுவும் கொடுத்தார்பாரே

விளக்கவுரை :


4514. பாரேதான் புலிப்பாணி மைந்தாகேளு பண்புடனே யுந்தமக்கு சொல்வேன்யானும்
நேரேதான் தெற்குமுகந்தன்னிலப்பா நேரான கிக்கிந்தா மலைதானுண்டு
கூரேதான் மலைதனிலே வதிசயங்கள் குறிப்பான வடிவேலர் கோயிலுண்டு
பாரேதான் வைகையென்ற நதியுமுண்டு வளமான சுனையுண்டு கானாறுண்டே

விளக்கவுரை :


4515. உண்டான மலைதனிலே சித்தரப்பா ஓகோகோ நாதாக்கள் கோடியுண்டு
கண்டாலும் விடுவார்கள் முனிவர்தானும் காசினியில் மாண்பர்கட்கு கண்ணிற்கிட்ட
பண்டுடனே கிழங்குமுதல் சரிகையாவும் பாலமுர்தம்கொண்டல்லோ யிருப்பார்தாமும்
பெண்டான மாய்கையது அறியாரப்பா பேரான சித்தர்முனி கூட்டந்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4506 - 4510 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4506. தானான வசுவினியாந் தேவர்தானும் தண்மையுடன் எந்தன்மேல் கிருபைவைத்து
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் பாதமது கடாட்சத்தாலும்
தேனான மனோன்மணியாள் கிருபையாலும் தேற்றமுடன் என்மீதில் பட்சம்வைத்து
பானான முறைப்படியே என்னைத்தானும் பாங்குடனே சீஷவர்க்கம் நினைத்தார்தாமே

விளக்கவுரை :


4507. தாமான வசுவினியாந்தேவர்தானும் தண்மையுடன் எந்தன்முகந்தன்னைநோக்கி
பூமானாங் காலாங்கி கொண்டசீஷர்புகழான எந்தன்இருமணியே கேண்மோ
சாமானமானதொரு புரவிதானும் சட்டமுடன் நிர்மித்த வண்மைதன்னை
கோமானே போகரிஷிதுய்யபாலா கூறுவீர் எந்தனுக்கு உண்மைதானே

விளக்கவுரை :

[ads-post]

4508. உண்மையுடன் அசுவினியாந் தேவர்தானும் வுகமையுடன் உத்தாரம்கேட்கும்போது
தண்மையுடன் அடியேனும் தாள்வணங்கி சட்டமுடன் யானுரைத்தேன் தேவர்சங்கம்
திண்மையுடன் ஆகாயபுரவிதன்மேல் தீர்க்கமுடன் அடியேனும் சென்றுமல்லோ
வண்மையுடன் சீனபதியானும் சென்றேன் வளமான புரவிதனைக் கண்டார்தாமே

விளக்கவுரை :


4509. கண்டாரே செம்புரவி தன்னைப்பார்த்து கைலாயநாதருட புரவியென்று
அண்டர்முனி ராட்சதர்கள் புரவிதானோ ஆண்டவனார் மஹேஸ்வரனார்புரவிதானோ
கொண்டுமே தன்மனதில் எண்ணங்கொண்டு குறிப்புடனே புரவியது போலமைத்து
சண்டமாருதம்போல புரவிதன்னை சாங்கமுடன் எந்தனுக்கு தந்தார்தாமே

விளக்கவுரை :


4510. தந்தாரே செம்புரவிக் குயிருந்தந்து தகமையுள்ள சீனபதிமாந்தர்தாமும் 
அந்தமுடன் செம்புரவி அமைத்துமேதான்அன்பாகத்தான்கொடுத்தார் எங்களுக்கு
சொந்தமுடன் அசுவினியாந்தேவருக்குத் தோறாமல் செம்புரவி கொண்டுசென்றேன்
சிந்தனைகள் மிகத்தீர்ந்து செப்பலுற்றேன் திறமான அசுவினியாந்தேவருக்கே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4501 - 4505 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4501. நினைத்துமே சீனபதிதேசத்தோர்கள் நிகட்சியுடன் ஆகாயப்புரவிதானும்
பனையமென்ற செம்பாலே புரவிசெய்து பாங்குடனே பஞ்சலோகந் தன்னைச்சேர்த்து
தினைவுடனே பஞ்சகர்த்தாள் ஒடுக்கத்தாலும் திகழான பஞ்சலோகந் தன்னிற்சேர்த்து
முனையான பஞ்சபூதம் ஒன்றாய்ச் சேர்க்க முசியாமல் செம்புக்கு வுயிருமாச்சே

விளக்கவுரை :


4502. ஆச்சப்பா பிரிதினில் அப்புசேர்ந்து வன்புடனே வுப்புதனில் தேய்வுசேர்ந்து
மூச்சப்பா தேய்வுதனில் வாய்வுசேர்ந்து முசியாமல் வாய்வுதனில் ஆகாயஞ்சேர்ந்தஉ
மாச்சலுடன் பஞ்சபூதம் ஒன்றோடொன்று மார்க்கமுடன் ஒன்றுக்குள் ஒன்றடக்கம்
பாச்சலுடன் பூதங்கள் ஐந்துசேர்ந்து பாங்கான வசுவத்துக் குயிருமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

4503. உயராசை சீனபதி மார்க்கத்தார்கள் ஒப்பமுடன் அசுவமது செய்துமேதான்
மயில்போன்ற செம்புரவி தனையமைத்து மகத்தான வாகாயங்கொண்டுசெல்ல
பயிலான சூத்திரத்தில் வாயுதாக்கி பாரினிலே பறப்பதற்கு மயமுண்டாக்கி
அயிலமுடன் சீனபதிமாண்பரெல்லாம் வன்புடனே அசுவமது சமைத்தார்பாரே

விளக்கவுரை :


4504. பாரேதான் போகருட வசுவம்போல பாங்குடனே சீனபதிமாண்பரெல்லாம்
நேரேதான் செம்புரவி நியமித்தார்கள் நேர்மையுடன் செம்புரவி தன்னைத்தானும்
சீரேதான் அசுவதாரிஷியாருக்கு சிறப்புடனே சீனபதி அசுவந்தன்னை 
தீரேதான் குளிகையது பூண்டுகொண்டு தீரமுடன் அசுவதாபதிசேர்ந்தேனே

விளக்கவுரை :


4505. பதியான வசுவினியார் வாசீர்மந்தான் பாலகனே புலிப்பாணி மைந்தாகேளு
துதியுடனே வாசீர்மஞ் சென்றேன்யானும் துப்புரவே யசுவினியாந் தேவர்பக்கல்
மதிபோன்ற செம்புரவி தன்னைத்தானும் மார்க்கமுடன் கொண்டல்லோ சென்றுநின்றேன்
அதிவினய பலகாலும் விண்ணப்பங்கள் வன்புடனே வஞ்சலிகள் செய்தேன்தானே  

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4496 - 4500 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4496. பாரேதான் செம்புரவி மார்க்கந்தன்னில் பாரினிலே ராஜாக்கள் கண்டதில்லை
நேரேதான் தேசமெலாஞ் சுத்திவந்து நேர்மையுடன் சவதாவனத்தைக்கண்டேன்
கூரேதான் சுவதாரிஷியாசீர்மம் குறிப்பான சைனபதிமார்க்கத்தோரே
தீரேதான் ஆசீர்மஞ் சென்றுமல்லோ திகழான ரிஷியாரைப் பார்த்திட்டேனே

விளக்கவுரை :


4497. பார்த்திட்டேன் சுவதாரிஷிவனத்தில் பாங்கான செம்புரவி மகிமைதன்னை
தீர்த்திட்டேன் ஆகாயபுரவிதன்னை திறமான வசுவினியாந்தேவர்தன்னை
நேர்த்தியுடன் புரவிதன்னை வேண்டுமென்றேன் நேர்மையுடன் ரிஷியாரும் மனதுவந்து
பூர்த்தியுடன் எந்தமக்கும் புரவிதானும் புகழாகத் தான்கொடுத்தார் தேவர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

4498. தேவராம் அசுவினியார் கடாட்சத்தாலே தேற்றமுடன் புரவிதனின் மீதிலேறி
ஆவலுடன் சீனபதிமார்க்கத்தோர்கள் வன்பாகக் காணுதற்குவேண்டுமென்று
மேவலுடன் குளிகைதன்னை சோதித்தேதான் மெச்சியே செம்புரவி கொண்டுவந்தேன்
ஏவலது செய்வதற்கு சீனத்தோர்க்கு எழிலான புரவியது மகிமைதானே

விளக்கவுரை :


4499. தானான புரவியது உந்தமக்காய்க் தன்மையுடன் கொண்டுவந்தேன் அருமைமெத்த
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தாமுரைத்த நீதிதன்னால்
பானான காட்டகத்தை யானுஞ்சென்று பட்சமுடன் கொண்டுவந்தேன் புரவிதன்னை
தேனான வார்த்தையது மிகவுங்கூறி தெளிவாகத் தாமுரைத்தார் வதிதந்தானே

விளக்கவுரை :


4500. அதிதமுடன் புரவிதன்னைக்கண்டபோது அங்ஙனவே சீனபதிமார்க்கத்தோர்கள்
துதிதமுடன் புரவியது போலேசெய்ய துப்புரவா யெத்தனங்கள் மிகவேசெய்வார்
நதிதமுள்ள பரவியது செய்வதற்கு நாதாந்தமுனிவரால் முடியாதல்லோ
கதிதமுள்ள செம்புரவி செய்வதற்கு கருவாக சீனபதி நினைத்தார்தாமே

விளக்கவுரை :


Powered by Blogger.