போகர் சப்தகாண்டம் 4511 - 4515 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4511 - 4515 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4511. தேவராம் ரிஷிமுனிவர்நாதர்தாமும் தேற்றமுடன் செம்புரவி தன்னைப்பார்த்து
யாவலுடன் சீனபதிமார்க்கத்தோர்கள் வன்பாகச் செய்துவைத்த புரவிதன்னை
மேவவே குளிகையது வேகந்தன்னை விருப்பமுடன் கண்டல்லோ மிகக்களித்து
தாவலுடன் புரவிக்கு வுதேசங்கள் சட்டமுடன் தான்கொடுத்தார் ரிஷியார்தாமே

விளக்கவுரை :


4512. தானான புரவிக்கு மகிமைசொன்னார் தண்மையுள்ள வசுவினியாந்தேவர்தானும்
கோனான வுபதேசம் என்னவென்றால் கொற்றவனார் போகரிஷிவுத்தாரந்தான்
தேனான செம்புரவி கேட்பதற்கு செப்பினார் தேவரிஷிமுனிவர்தானும்
பானான வுலகமெலாம் சுத்தும்போது பண்பாக நில்லென்றால் நிற்கவேண்டும்

விளக்கவுரை :

[ads-post]

4513. வேண்டுமே போவென்றால் போகவேண்டும் விருப்பமுடன் வீதிகளில் நிற்கவென்றால்
தூண்டுமிகக் கருமான பஞ்சதாதும் தொட்டவுடன் அசைவற்று நிற்கவேண்டும்
தாண்டியே செல்லாமல் போகர்வாக்கு தட்டாமல் மகிமைதனை யறியவேண்டும்
பாண்டுடனே வெகுகாலமிருக்கவென்று வன்புடனே வரமதுவும் கொடுத்தார்பாரே

விளக்கவுரை :


4514. பாரேதான் புலிப்பாணி மைந்தாகேளு பண்புடனே யுந்தமக்கு சொல்வேன்யானும்
நேரேதான் தெற்குமுகந்தன்னிலப்பா நேரான கிக்கிந்தா மலைதானுண்டு
கூரேதான் மலைதனிலே வதிசயங்கள் குறிப்பான வடிவேலர் கோயிலுண்டு
பாரேதான் வைகையென்ற நதியுமுண்டு வளமான சுனையுண்டு கானாறுண்டே

விளக்கவுரை :


4515. உண்டான மலைதனிலே சித்தரப்பா ஓகோகோ நாதாக்கள் கோடியுண்டு
கண்டாலும் விடுவார்கள் முனிவர்தானும் காசினியில் மாண்பர்கட்கு கண்ணிற்கிட்ட
பண்டுடனே கிழங்குமுதல் சரிகையாவும் பாலமுர்தம்கொண்டல்லோ யிருப்பார்தாமும்
பெண்டான மாய்கையது அறியாரப்பா பேரான சித்தர்முனி கூட்டந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar