4516. கூட்டமா மலைதனிலே
குளிகைகொண்டு கொப்பெனவே மலைமீதில் இறங்கினேன்யான்
நீட்டமுடன் மலைதனிலே
யிருந்தசித்து நேர்மையுடன் எந்தனதுபுரவிகண்டார்
தாட்டிகமாய் புரவியிடம்
கிட்டநின்று சாங்கமுடன் எந்தனையும் கண்டிட்டார்கள்
வாட்டமுடன் சிறுபாலா
புரவியென்ன வந்தவகை தானெனக்கு சொல்லென்றாரே
விளக்கவுரை :
4517. சொல்லென்று கேட்கையிலே சித்துதாமும் தோறாமல் புரவியது மகிமையோடு
வெல்லவே சித்துமுனி
நாதருக்கு எழிலான எந்தனது புரவிதானும்
நல்லதொரு வார்த்தையது
மிகவுங்கூறி நன்மையுடன் தானுரைக்கும் புரவிதானும்
புல்லவே காலாங்கி
சீஷர்தம்மின் புகழான போகரிஷி யென்னலாச்சே
விளக்கவுரை :
[ads-post]
4518. என்னவே புரவியது
மகிமைதன்னால் எழிலான வார்த்தையது மிகவேகூறி
பன்னவே அசுவினியாந்
தேவர்தானும் பாங்கான போகரிஷிநாதருக்கு
சொன்னமென்ற புரவியது
தான்கொடுத்தார் துப்புரவாய் சீனபதிகொண்டுசென்றார்
அன்னமது தன்போலே வாய்திறந்து
அழகான வார்த்தையது கூறலாச்சே
விளக்கவுரை :
4519. கூறவே சீனபதிமாண்பரெல்லாம்
குறிப்பான புரவியது மகிமைகண்டு
மாறவே பஞ்சலோகந் தன்னிலேதான்
மகத்தான புரவியது வுண்டுசெய்து
ஆறலுடன் பஞ்சபூதங்களைத்தான்
வன்பாகத் தான்கொடுத்து என்னைத்தானும்
வீறலுடன் போகரிஷிநாதருக்கு
விருப்பமுடன் தான்கொடுத்து வனுப்பினாரே
விளக்கவுரை :
4520. அனுப்பவே செம்புரவி
யடியேன்தன்னை அழகான போகரிஷிமுனிவர்தாமும்
மனுவுடனே எந்தனையும்
வசமதாக்கி மகிழ்ச்சியுடன் குளிகையது தானும்பூண்டு
தனுர்வுடனே
ஆசீர்மங்கொண்டுமல்லோ தகமையுள்ள கிக்கிந்தா மலையைத்தேடி
கனுவுடனே வந்தாரே போகநாதர்
கைலங்கிரி நாதரைத்தான் காணத்தானே
விளக்கவுரை :