4506. தானான வசுவினியாந்
தேவர்தானும் தண்மையுடன் எந்தன்மேல் கிருபைவைத்து
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனார் பாதமது கடாட்சத்தாலும்
தேனான மனோன்மணியாள்
கிருபையாலும் தேற்றமுடன் என்மீதில் பட்சம்வைத்து
பானான முறைப்படியே
என்னைத்தானும் பாங்குடனே சீஷவர்க்கம் நினைத்தார்தாமே
விளக்கவுரை :
4507. தாமான
வசுவினியாந்தேவர்தானும் தண்மையுடன் எந்தன்முகந்தன்னைநோக்கி
பூமானாங் காலாங்கி
கொண்டசீஷர்புகழான எந்தன்இருமணியே கேண்மோ
சாமானமானதொரு புரவிதானும்
சட்டமுடன் நிர்மித்த வண்மைதன்னை
கோமானே போகரிஷிதுய்யபாலா
கூறுவீர் எந்தனுக்கு உண்மைதானே
விளக்கவுரை :
[ads-post]
4508. உண்மையுடன் அசுவினியாந்
தேவர்தானும் வுகமையுடன் உத்தாரம்கேட்கும்போது
தண்மையுடன் அடியேனும்
தாள்வணங்கி சட்டமுடன் யானுரைத்தேன் தேவர்சங்கம்
திண்மையுடன்
ஆகாயபுரவிதன்மேல் தீர்க்கமுடன் அடியேனும் சென்றுமல்லோ
வண்மையுடன் சீனபதியானும்
சென்றேன் வளமான புரவிதனைக் கண்டார்தாமே
விளக்கவுரை :
4509. கண்டாரே செம்புரவி தன்னைப்பார்த்து கைலாயநாதருட புரவியென்று
அண்டர்முனி ராட்சதர்கள்
புரவிதானோ ஆண்டவனார் மஹேஸ்வரனார்புரவிதானோ
கொண்டுமே தன்மனதில்
எண்ணங்கொண்டு குறிப்புடனே புரவியது போலமைத்து
சண்டமாருதம்போல புரவிதன்னை
சாங்கமுடன் எந்தனுக்கு தந்தார்தாமே
விளக்கவுரை :
4510. தந்தாரே செம்புரவிக்
குயிருந்தந்து தகமையுள்ள சீனபதிமாந்தர்தாமும்
அந்தமுடன் செம்புரவி
அமைத்துமேதான்அன்பாகத்தான்கொடுத்தார் எங்களுக்கு
சொந்தமுடன்
அசுவினியாந்தேவருக்குத் தோறாமல் செம்புரவி கொண்டுசென்றேன்
சிந்தனைகள் மிகத்தீர்ந்து
செப்பலுற்றேன் திறமான அசுவினியாந்தேவருக்கே
விளக்கவுரை :