போகர் சப்தகாண்டம் 4531 - 4535 of 7000 பாடல்கள்
4531. சமைத்துமே
போகரிஷிநாதர்தாமும் தகமையுள்ள கிக்கிந்தா மலைதானுள்ளே
அமைந்துமே கல்லாகச்
சமைந்தாரப்பா அங்ஙனவே மாண்பர்களுங் கண்டதில்லை
இமைந்த
தொருபோகரிஷிநாதர்தம்மை எழிலான நாதவொளி சித்துதாமும்
சமைந்ததொரு
போகரிஷிநாதர்தம்மை சட்டமுடன் சித்தொளிவும் எழுப்பினாரே
விளக்கவுரை :
4532. எழுப்பினார் நாதாந்த
சித்துதாமும் எழிலான போகரிஷிநாதர்தம்மை
வழுக்கில்லா நாதாந்த
சித்துதாமும் வளமாக போகருக்கு வாசீர்மித்து
அழுக்கறவே அவணிதனில்
எந்தநாளும் வப்பனே சிரஞ்சீவி பட்டந்தந்தேன்
ஒழுக்கமுடன் உமதுபதி
போகவென்று வுத்தமனார் சித்தொளியும் விடைதந்தாரே
விளக்கவுரை :
[ads-post]
4533. எழுப்பினார் நாதாந்த சித்துதாமும் தண்மையுள்ள போகரிஷிநாதர்தம்மால்
அந்தமுடன் தானெழுப்பி
வினயங்கேட்க அழகான போகரிஷிமுனியார்தாமும்
சொந்தமுடன் காலாங்கி
சீடனென்றேன் சுந்தரனே எனைப்பார்த்து மிகக்களித்து
விந்தையுடன்
உபதேசங்கூறியல்லோ விண்ணுலகில் போகவென்று வரந்தந்தாரே
விளக்கவுரை :
4534. தந்தாரே நாதவொளி
சித்துதாமும் தகமையுடன் போகரிஷிநாதருந்தான்
சந்தரமாந்
திருவேலரிஷியார்தம்மை சுத்தமுடன் யான்கண்டபோதுமல்லோ
வந்தையாயெந்தனையும்
பார்த்துமல்லோ விட்டகுறை யிருந்ததினால் யெழுந்தீரேதான்
அந்தமுடன் காலாங்கி
கிருபையாலே அவனிதனில் மறுபடியும் பிறக்கலாச்சே
விளக்கவுரை :
4535. பிறந்துமே ஜனனமது
வொழிந்துமேதான் பேறான போகரிஷிநாதர்கேளும்
இறந்தவர்கள் இவ்வுலகில்
பிறந்ததுண்டோ எழிலான மகிமையது கூறொண்ணாது
திறமுடைய சித்துமகா
ரிஷியார்தாமும் தீர்க்கமுடன் எந்தனுக்கு உபதேசங்கள்
வுறமாகத் தான்கொடுத்து
வாசீர்மித்து வுற்பனங்கள் மிகவுமல்லோ ஓதினாரே
விளக்கவுரை :