4526. இட்டேனே நான்குதிரு
கோட்டைவாசல் எழிலான சித்துமுனி சமாதிகண்டேன்
வாட்டமுடன் கோட்டையது
வாசல்தாண்டி வண்மையுள்ள திருவேலரிஷியார்முன்னே
தட்டாமல் எந்தனையும்
சீஷவர்க்கம் சட்டமுடன் எந்தனையுங் கொண்டுசென்றார்
திட்டமுடன் திருவேலர்
ரிஷியார்தாமும் தீர்க்கமுடன் எந்தனையும் கண்டிட்டாரே
விளக்கவுரை :
4527. கண்டாரே
திருவேலரிஷியார்தாமும் கடினமுடன் சீஷவர்க்கந்தனையழைத்து
அண்டமதில் குளிகைகொண்டு
சிறுபாலன்தான் ஆகாய செம்புரவி விட்டிறங்கி
சண்டமாருதம்போல மலைதானுள்ளே
சட்டமுடன் வந்தவரை யாரென்றென்ன
துண்டரீகமுள்ள
தொருசீஷவர்க்கம் துப்புரவாய் தனையழைத்துக் கேட்டார்தாமே
விளக்கவுரை :
[ads-post]
4528. கேட்கையிலே திருவேல
ரிஷியார்தாமும் கெவனமுடன் சீஷவர்க்கமோடிவந்து
விட்கமுடன்
போகரிஷிநாதர்தம்மை மிரட்டியே மிகபேசி வாதுகூறி
தாழ்க்கமலந்தனிலிருக்கு
வேலரான தகமையுள்ள ரிஷியாரும் உந்தன்மீது
ஆட்கமுடன் சினமதுவும்
நேர்ந்துமல்லோ அப்பனே யுன்மீதிற் சீறினாரே
விளக்கவுரை :
4529. சீறவே சீஷவர்க்கம்
நாங்களுந்தான் சிறப்பான திருவேல ரிஷியார்வாக்கு
மீறியே வநததொரு மொழியினாலே
மிக்கவே யுந்தனையுஞ் சபிக்கவென்று
ஆறியதோர் கோபமதைதனையகற்றி
வப்பனே யுன்முன்னே வந்தோம்நாங்கள்
மாறியதோர் கல்லோடே
யுனைசபிக்க மகத்தான வேலர்முனி விடைதந்தாரே
விளக்கவுரை :
4530. விடைதந்தார் எங்களது
சித்துதாமும் வேதாந்த ரிஷியாரும் மனதுவந்து
தடையதுவும் நேராமல்
யாங்களுந்தான் சாங்கமுடன் கல்லாகச் சுமைப்போமென்று
சடைபோன்ற சித்துமுனி
சீஷவர்க்கம் சதுரான போகரிஷிநாதர்தம்மை
படைவீரர் ஒன்றாகக்கூடியல்லோ
பாரினிலே கல்லாக சமைத்திட்டாரே
விளக்கவுரை :