போகர் சப்தகாண்டம் 4586 - 4590 of 7000 பாடல்கள்
4586. விழுங்கியே
பதினாறுவாண்டுமாச்சு வீறான திருக்குளமும் வற்றிப்போச்சு
மழுகமழுங் கூடிருந்த
தோழனுக்கு மகத்தான திருமணமும் புரியலாச்சு
ஒழுங்குடைய யெங்களது
மதலைதானும் வுத்தமரே தாமிருந்தானாங்களுந்தான்
தொழுங்கமுடன் திருமணமுஞ்
செய்வோமல்லோ துரைராஜ மதலையைத்தான் நினைந்திட்டோமே
விளக்கவுரை :
4587. இளந்தோமே மதலையைத்தானென்று
சொல்லி எழிலான சுந்தரற்குத்தாமுரைத்தார்
குளந்தனையே காட்டவென்று
மூர்த்தியாரும் கொப்பெனவே சோழவளநாடார்தம்மை
பளமையுடன் மூர்த்தியவர்
கேட்கும்போது பாங்கான சோழவளநாடார்தாமும்
வளமையுடன் வுரைக்கலுற்றார்
மூர்த்தியார்க்கு வாகுடனே மதலையாகஞ் செய்தார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
4588. பாரேதான் யாகமது
செய்யும்போது பாங்கான சுந்தரனார்மூர்த்தியாகும்
நேரேதான் குளந்தனிலே
சலமுண்டாக்கி நேர்மையுடன் எந்தனையும் வரவழைத்து
சீரேதான் விழுங்கியதோர்
மதளைதன்னை சிறப்பாகத்தான்வாங்கி வெளியில்விட்டார்
கூறேதான் மைநதனையுஞ்
சோழமாண்பர் குறிப்புடனே தானெடுத்து கொடுபோனாரே
விளக்கவுரை :
4589. போனவுடன் அடியேனும் சாபத்தாலே புகழான சுந்தரமூர்த்திதன்னால்
வானமுடன் தேவர்களும்
வணங்கும்நாடு மகத்தான கிக்கிந்தா மலையினுச்சி
தேனமிர்தமானதொரு
சுனையினுள்ளே தேற்றமுடன் வெகுகோடிகாலமப்பா
ஞானமிர்தமுண்டல்லோ
சுனையில்யானும் மகத்தான மலைதனிலே இருக்கின்றேனே
விளக்கவுரை :
4590. இருக்கிறேன்
என்றல்லோபோகருக்கு எழிலான முதலையது கூறியேதான்
சுருக்கமுடன் சுந்தரனார்
மூர்த்தியாரின் சூட்சாதி வரலாற்றைக்கூறியேதான்
பெருக்கமுடன் சுனையருகில்
வந்தாலே பேறான வுந்தனுக்குச்சாபம்நேரும்
திருக்கமல வேலவனார்
ரிஷியார்தாமும் சிறப்பான பாதமரு பணிகுவீரே
விளக்கவுரை :