4571. பணிந்துமே சித்தர்முனி
தன்னைநோக்கி பான்மையுடன் அவர்பாதம் தொழுதுமேதான்
துணிந்துமே காலாங்கி
சீடனென்றார் துப்புரவாய் குளிகையது யானுங்கொண்டு
பணியான குளிகையது
பூண்டுமல்லோ மகத்தான வையகங்கள் சுத்திவந்தேன்
கனிவுடனே கிக்கிந்தா
மலையைக்கண்டு கருவான மலையென்று இறங்கஇனேனே
விளக்கவுரை :
4572. இறங்கியே வதிசயத்தை
பார்க்கவென்று எழிலான சித்தருக்குத் தாமுரைத்தார்
திறமுடைய சித்தர்முனி
மனதுவந்து தீர்க்கமுடன் காலாங்கி சீடனென்று
அறமதுவும் நேராமல்
வாசீர்மித்து வன்புடனே போகருக்கு இதவுகூறி
உறமுடனே உபதேசம் மிகவளித்து
வுத்தமனார்க்கு வரமதுவும் கொடுத்தார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
4573. பாரேதான் போகரிஷிமுனிவர்தாமும் பாங்குடனே சித்துதமை கேட்கும்போது
நேரேதான் முகதாவில்
போகருக்கு நேர்மையுடன் தாமுரைத்தார் சித்துதாமும்
தீரேதான் இம்மலையிலதிசயங்கள்
திறமான வெகுகோடி சித்தரப்பா
ஊரேதான் மலைதானுஞ்
சித்துநாடு ஓகோகோ நாதாக்கள் கூட்டந்தானே
விளக்கவுரை :
4574. கூட்டமாம் சுனைதனிலே
மச்சமுண்டு கோடான கோடியுகம் இருக்கும்மச்சம்
நீட்டமுடன் சித்தர்முனி
காவலுண்டு நெடிதான முதற்சுனையில் மைந்தாகேளு
தாட்டிகமாய் ரெண்டாங்கால்
சுனையிலெல்லாந் தாக்கான முதலையுண்டு சித்துமுண்டு
வாட்டமுடன் யுகத்தில்
குழந்தைதன்னை வாரியுண்ட முதலையின்தன் சுனையுமாமே
விளக்கவுரை :
4575. ஆமேதான் முன்யுகத்தில்
சுந்தரமூர்த்தி வன்புடனே எழுப்பிவிட்ட முதலையப்பா
தாமேதான் மதலைதலை
விழுங்கிவிட்ட தன்மையுள்ள முதலையிது யென்றுசொல்லி
வேமேதான் முததையின்றன்
மகிமைதன்னை விருப்பமுடன் தாமுரைத்தார் போகருக்கு
தீமேதான் வாராமல்
சித்துதாமும் சிறப்பான முதலைமொழி கூறினாரே
விளக்கவுரை :