4576. கூறினார் சித்தர்முனி
ரிஷிகள்தாமும் குறிப்பாகக் கிக்கிந்தா மலையினுச்சி
ஆறவே மேல்வரையிற்
சென்றுமேதான் வன்பான போகரிஷிமுனிவர்தானும்
சீறலுடன் சினங்கொண்டு
வுறுதிகொண்டு சிறப்பான சுனையருகில் கிட்டிநின்று
தேறவே
சுனைமுகத்தைக்காணும்போது துப்புரவாய் சித்தொருவர் கண்டிட்டாரே
விளக்கவுரை :
4577. கண்டாரே போகரிஷிநாதர்தம்மை
கனமான கிக்கிந்தா மலையில்சித்து
விண்டதொரு சுனைவளத்தை
போகருக்கு விருப்பமுடன் உபதேசஞ் செய்யலுற்றார்
மண்டலங்கள் தான்புகழும்
சுந்தரனார்தாமும் மகத்தான மதலைதனை யெழுப்பிவைத்து
துண்டரிகமானதொரு முதலைதானும்
துப்புரவாய் இச்சுனையைக் காணலாமே
விளக்கவுரை :
[ads-post]
4578. காணலாம் எந்தனது
வுத்தாரந்தான் கனமான சிறுபாலா சுனையின்பக்கல்
நீணவே வுத்தாரமன்றியல்லோ
நீதியுடன் சுனையருகில் செல்லலாகா
பூணவே வுத்தாரம்
பெற்றுக்கொண்டு புகழான போகரிஷி செல்லலாகும்
வேணபடி தாமுரைத்தார்
சித்தர்தாமும் விருப்பமுடன் கேட்டாரே போகர்தாமே
விளக்கவுரை :
4579. தாமான போகரிஷி சித்துதாமும்
தன்மையுடன் ரிஷியாரை வணங்கியேதான்
பூமானாஞ் சுந்தரனார்
முதலைதன்னை புகழுடனே யடியேனுங்காணவென்று
வேமான மாகவல்லோ போகர்தாமும்
விருப்பமுடன் ரிஷிதமையே கேட்டபோது
சீமானாம் போகரிஷிவந்தாரென்று
சிறப்புடனே முதலைதனை யழைத்தார்காணே
விளக்கவுரை :
4580. காணவே போகரிஷிநாதர்தானுங்
கனமான முதலைதனைக் கண்டபோது
நீணவே போகரிஷிநாதர்தானும்
நியாயமுடன் முதலைதனைக் கண்டபோது
வேணவே வுபசாரமஞ்சலிகள்தானும்
விருப்பமுடன் தான்செய்தார் போகர்தானும்
மாணவே சினங்கொண்டு
போகர்தானும் மகத்தான முதலைதனை கண்டிட்டாரே
விளக்கவுரை :