போகர் சப்தகாண்டம் 4531 - 4535 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4531. சமைத்துமே போகரிஷிநாதர்தாமும் தகமையுள்ள கிக்கிந்தா மலைதானுள்ளே
அமைந்துமே கல்லாகச் சமைந்தாரப்பா அங்ஙனவே மாண்பர்களுங் கண்டதில்லை
இமைந்த தொருபோகரிஷிநாதர்தம்மை எழிலான நாதவொளி சித்துதாமும்
சமைந்ததொரு போகரிஷிநாதர்தம்மை சட்டமுடன் சித்தொளிவும் எழுப்பினாரே

விளக்கவுரை :


4532. எழுப்பினார் நாதாந்த சித்துதாமும் எழிலான போகரிஷிநாதர்தம்மை 
வழுக்கில்லா நாதாந்த சித்துதாமும் வளமாக போகருக்கு வாசீர்மித்து
அழுக்கறவே அவணிதனில் எந்தநாளும் வப்பனே சிரஞ்சீவி பட்டந்தந்தேன்
ஒழுக்கமுடன் உமதுபதி போகவென்று வுத்தமனார் சித்தொளியும் விடைதந்தாரே

விளக்கவுரை :

[ads-post]

4533. எழுப்பினார் நாதாந்த சித்துதாமும் தண்மையுள்ள போகரிஷிநாதர்தம்மால்
அந்தமுடன் தானெழுப்பி வினயங்கேட்க அழகான போகரிஷிமுனியார்தாமும்
சொந்தமுடன் காலாங்கி சீடனென்றேன் சுந்தரனே எனைப்பார்த்து மிகக்களித்து
விந்தையுடன் உபதேசங்கூறியல்லோ விண்ணுலகில் போகவென்று வரந்தந்தாரே

விளக்கவுரை :


4534. தந்தாரே நாதவொளி சித்துதாமும் தகமையுடன் போகரிஷிநாதருந்தான்
சந்தரமாந் திருவேலரிஷியார்தம்மை சுத்தமுடன் யான்கண்டபோதுமல்லோ
வந்தையாயெந்தனையும் பார்த்துமல்லோ விட்டகுறை யிருந்ததினால் யெழுந்தீரேதான்
அந்தமுடன் காலாங்கி கிருபையாலே அவனிதனில் மறுபடியும் பிறக்கலாச்சே

விளக்கவுரை :


4535. பிறந்துமே ஜனனமது வொழிந்துமேதான் பேறான போகரிஷிநாதர்கேளும்
இறந்தவர்கள் இவ்வுலகில் பிறந்ததுண்டோ எழிலான மகிமையது கூறொண்ணாது
திறமுடைய சித்துமகா ரிஷியார்தாமும் தீர்க்கமுடன் எந்தனுக்கு உபதேசங்கள்
வுறமாகத் தான்கொடுத்து வாசீர்மித்து வுற்பனங்கள் மிகவுமல்லோ ஓதினாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4526 - 4530 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4526. இட்டேனே நான்குதிரு கோட்டைவாசல் எழிலான சித்துமுனி சமாதிகண்டேன்
வாட்டமுடன் கோட்டையது வாசல்தாண்டி வண்மையுள்ள திருவேலரிஷியார்முன்னே
தட்டாமல் எந்தனையும் சீஷவர்க்கம் சட்டமுடன் எந்தனையுங் கொண்டுசென்றார்
திட்டமுடன் திருவேலர் ரிஷியார்தாமும் தீர்க்கமுடன் எந்தனையும் கண்டிட்டாரே

விளக்கவுரை :


4527. கண்டாரே திருவேலரிஷியார்தாமும் கடினமுடன் சீஷவர்க்கந்தனையழைத்து
அண்டமதில் குளிகைகொண்டு சிறுபாலன்தான் ஆகாய செம்புரவி விட்டிறங்கி
சண்டமாருதம்போல மலைதானுள்ளே சட்டமுடன் வந்தவரை யாரென்றென்ன
துண்டரீகமுள்ள தொருசீஷவர்க்கம் துப்புரவாய் தனையழைத்துக் கேட்டார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

4528. கேட்கையிலே திருவேல ரிஷியார்தாமும் கெவனமுடன் சீஷவர்க்கமோடிவந்து
விட்கமுடன் போகரிஷிநாதர்தம்மை மிரட்டியே மிகபேசி வாதுகூறி
தாழ்க்கமலந்தனிலிருக்கு வேலரான தகமையுள்ள ரிஷியாரும் உந்தன்மீது
ஆட்கமுடன் சினமதுவும் நேர்ந்துமல்லோ அப்பனே யுன்மீதிற் சீறினாரே 

விளக்கவுரை :


4529. சீறவே சீஷவர்க்கம் நாங்களுந்தான் சிறப்பான திருவேல ரிஷியார்வாக்கு
மீறியே வநததொரு மொழியினாலே மிக்கவே யுந்தனையுஞ் சபிக்கவென்று
ஆறியதோர் கோபமதைதனையகற்றி வப்பனே யுன்முன்னே வந்தோம்நாங்கள்
மாறியதோர் கல்லோடே யுனைசபிக்க மகத்தான வேலர்முனி விடைதந்தாரே

விளக்கவுரை :


4530. விடைதந்தார் எங்களது சித்துதாமும் வேதாந்த ரிஷியாரும் மனதுவந்து
தடையதுவும் நேராமல் யாங்களுந்தான் சாங்கமுடன் கல்லாகச் சுமைப்போமென்று
சடைபோன்ற சித்துமுனி சீஷவர்க்கம் சதுரான போகரிஷிநாதர்தம்மை
படைவீரர் ஒன்றாகக்கூடியல்லோ பாரினிலே கல்லாக சமைத்திட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4521 - 4525 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4521. தானான புரவியது கூறும்போது தண்மையுள்ள திருவேல தேவர்தானும்
தேனான செம்புரவி தன்தனக்கு தேற்றமுடன் ஞானோபதேசஞ்சொல்லி
பானான காலாங்கி நாதர்தம்மின் பான்மையுள்ள சீஷனென்று மனதுவந்து
தேனான மகுத்துவமாங் கிரியைதன்னை தேற்றமுடன் உபதேசஞ்செய்தார்பாரே

விளக்கவுரை :


4522. பாரேதான் செம்புரவி யுபதேசத்தை பாங்குடனே கொண்டபின்பு யடியேனுக்கு
நேரேதான் திருவேலரிஷியாசீர்மம் நேர்மையுடன் சீஷவர்க்கம் கொண்டுசென்று
தீரேதான் திருவேல ரிஷியார்முன்னே தீர்க்கமுடன் எந்தனையுங்கொண்டுசெல்ல
வேரேதான் கிக்கிந்தா மலைநாட்டுள்ளே விடுதிதனில் புரவிவிட்டு இறங்கினேனே

விளக்கவுரை :

[ads-post]

4523. இறங்கினேன் கிக்கிந்தா மலைதானுள்ளே எழிலான சீஷவர்க்கந்தன்னைக்கண்டேன்
சுறங்கமென்ற குகைதனிலே சீஷர்தாமும் சூட்சமுடன் எந்தனையுங் கொண்டுசென்றார்
மறங்களுடன் மலைதனிலே கோட்டையுண்டு மகத்தான கோட்டைக்கு வாசல்நான்கு
திறமுடனே வாசல்வழி யென்னைத்தானும் திகழுடனே கொண்டுசென்றார் சீஷர்காணே

விளக்கவுரை :


4524. காணவே கோட்டைவழி தன்னிற்சென்று கருவாக முன்வாசல் நிற்கும்போது
தோணவே தாளதுதான் திறந்ததங்கே துப்புறவாய் லிங்கமென்ற சமாதிகண்டேன்
பூணவே ரெண்டாங்கால் வாசல்சென்று புகழாக எந்தனையுங் கொண்டுசென்றார்
நாணவே ஜோதிலிங்கஞ் சமாதிகண்டேன் நாதாந்த சித்தொருவர் கண்டேன்பாரே

விளக்கவுரை :


4525. பார்த்தேனே நாதாந்த சித்துதாமும் பாங்கான மூன்றாங்கால் வாசல்சென்றேன்
தீர்த்தமுடன் சிவலிங்கந் தன்னைக்கண்டேன் தீர்க்கமுள்ள சித்தொருவர் அங்கிருந்தார்
ஆர்க்கவே நாலாங்கால் பதிதானப்பா வன்புடனே வாசல்வழி சென்றேன்யானும்
நாற்கமல சமாதிதனில் வீற்றிருக்கும் நடராஜசுந்தரனைப் பார்த்திட்டேனே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4516 - 4520 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4516. கூட்டமா மலைதனிலே குளிகைகொண்டு கொப்பெனவே மலைமீதில் இறங்கினேன்யான்
நீட்டமுடன் மலைதனிலே யிருந்தசித்து நேர்மையுடன் எந்தனதுபுரவிகண்டார்
தாட்டிகமாய் புரவியிடம் கிட்டநின்று சாங்கமுடன் எந்தனையும் கண்டிட்டார்கள்
வாட்டமுடன் சிறுபாலா புரவியென்ன வந்தவகை தானெனக்கு சொல்லென்றாரே

விளக்கவுரை :


4517. சொல்லென்று கேட்கையிலே சித்துதாமும் தோறாமல் புரவியது மகிமையோடு
வெல்லவே சித்துமுனி நாதருக்கு எழிலான எந்தனது புரவிதானும்
நல்லதொரு வார்த்தையது மிகவுங்கூறி நன்மையுடன் தானுரைக்கும் புரவிதானும்
புல்லவே காலாங்கி சீஷர்தம்மின் புகழான போகரிஷி யென்னலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

4518. என்னவே புரவியது மகிமைதன்னால் எழிலான வார்த்தையது மிகவேகூறி
பன்னவே அசுவினியாந் தேவர்தானும் பாங்கான போகரிஷிநாதருக்கு
சொன்னமென்ற புரவியது தான்கொடுத்தார் துப்புரவாய் சீனபதிகொண்டுசென்றார்
அன்னமது தன்போலே வாய்திறந்து அழகான வார்த்தையது கூறலாச்சே

விளக்கவுரை :


4519. கூறவே சீனபதிமாண்பரெல்லாம் குறிப்பான புரவியது மகிமைகண்டு
மாறவே பஞ்சலோகந் தன்னிலேதான் மகத்தான புரவியது வுண்டுசெய்து
ஆறலுடன் பஞ்சபூதங்களைத்தான் வன்பாகத் தான்கொடுத்து என்னைத்தானும்
வீறலுடன் போகரிஷிநாதருக்கு விருப்பமுடன் தான்கொடுத்து வனுப்பினாரே

விளக்கவுரை :


4520. அனுப்பவே செம்புரவி யடியேன்தன்னை அழகான போகரிஷிமுனிவர்தாமும்
மனுவுடனே எந்தனையும் வசமதாக்கி மகிழ்ச்சியுடன் குளிகையது தானும்பூண்டு
தனுர்வுடனே ஆசீர்மங்கொண்டுமல்லோ தகமையுள்ள கிக்கிந்தா மலையைத்தேடி
கனுவுடனே வந்தாரே போகநாதர் கைலங்கிரி நாதரைத்தான் காணத்தானே 

விளக்கவுரை :


Powered by Blogger.