போகர் சப்தகாண்டம் 4586 - 4590 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4586. விழுங்கியே பதினாறுவாண்டுமாச்சு வீறான திருக்குளமும் வற்றிப்போச்சு
மழுகமழுங் கூடிருந்த தோழனுக்கு மகத்தான திருமணமும் புரியலாச்சு
ஒழுங்குடைய யெங்களது மதலைதானும் வுத்தமரே தாமிருந்தானாங்களுந்தான்
தொழுங்கமுடன் திருமணமுஞ் செய்வோமல்லோ துரைராஜ மதலையைத்தான் நினைந்திட்டோமே

விளக்கவுரை :


4587. இளந்தோமே மதலையைத்தானென்று சொல்லி எழிலான சுந்தரற்குத்தாமுரைத்தார்
குளந்தனையே காட்டவென்று மூர்த்தியாரும் கொப்பெனவே சோழவளநாடார்தம்மை
பளமையுடன் மூர்த்தியவர் கேட்கும்போது பாங்கான சோழவளநாடார்தாமும்
வளமையுடன் வுரைக்கலுற்றார் மூர்த்தியார்க்கு வாகுடனே மதலையாகஞ் செய்தார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

4588. பாரேதான் யாகமது செய்யும்போது பாங்கான சுந்தரனார்மூர்த்தியாகும்
நேரேதான் குளந்தனிலே சலமுண்டாக்கி நேர்மையுடன் எந்தனையும் வரவழைத்து
சீரேதான் விழுங்கியதோர் மதளைதன்னை சிறப்பாகத்தான்வாங்கி வெளியில்விட்டார்
கூறேதான் மைநதனையுஞ் சோழமாண்பர் குறிப்புடனே தானெடுத்து கொடுபோனாரே

விளக்கவுரை :


4589. போனவுடன் அடியேனும் சாபத்தாலே புகழான சுந்தரமூர்த்திதன்னால்
வானமுடன் தேவர்களும் வணங்கும்நாடு மகத்தான கிக்கிந்தா மலையினுச்சி
தேனமிர்தமானதொரு சுனையினுள்ளே தேற்றமுடன் வெகுகோடிகாலமப்பா
ஞானமிர்தமுண்டல்லோ சுனையில்யானும் மகத்தான மலைதனிலே இருக்கின்றேனே

விளக்கவுரை :


4590. இருக்கிறேன் என்றல்லோபோகருக்கு எழிலான முதலையது கூறியேதான்
சுருக்கமுடன் சுந்தரனார் மூர்த்தியாரின் சூட்சாதி வரலாற்றைக்கூறியேதான்
பெருக்கமுடன் சுனையருகில் வந்தாலே பேறான வுந்தனுக்குச்சாபம்நேரும்
திருக்கமல வேலவனார் ரிஷியார்தாமும் சிறப்பான பாதமரு பணிகுவீரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4581 - 4585 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4581. கண்டதொரு முதலையது மனதுவந்து கனமான போகரிஷிநாதருக்கு
உண்டான முன்யுகத்தின் அதிசயங்கள் வுத்தமர்க்குஃத் தானுரைக்கும் முதலைதானும்
மண்டலங்கள் தான்புகழுஞ் சுந்தரனார் தாமும் மகத்தான நாடுவளஞ்சுத்தும்போது
அண்டமெலாந் தான்புகழுமாதிநாடு அவ்வனத்தின் வூர்வழியே வந்திட்டாரே

விளக்கவுரை :


4582. வந்ததொரு சுந்தரனார் மூர்த்திதானும் வளமுடனே யவ்வீதி வருகும்போது
அந்தமுடன் மனுக்கூட்டம் சோழர்கூட்டம் வழகான திருவாசல் வாசல்முன்னே
சிந்தனையாய் சோழனது கூட்டத்தார்கள் சிறப்புடனே மனங்கலங்கி புலம்பும்போது
விந்தையுட னெதிர்மாளி திருமணமாம்வாசல் விகல்பமுடன் கண்டாரே மூர்த்தியாமே

விளக்கவுரை :

[ads-post]

4583. மூர்த்தியாஞ் சுந்தரனார் மனதுவந்து முத்தத்தில் நின்றதொரு மாந்தர்தம்மை
பார்த்துமே அழுகையென்ற சத்தமென்ன பாங்கான சோழவர்க்கஞ் சொல்லுமென்ன
தீர்த்திடுவேன் உந்தனது வபவாதத்தை திகழாகச் செப்புமென்றார் மூர்த்தியாகும்
ஆர்த்துமே சோழவர்க்க மாண்பரெல்லாம் வன்பாகத் தலைவணங்கி சொல்லிட்டாரே

விளக்கவுரை :


4584. சொல்லுவார் சோழவர்க்க மாண்பரெல்லாம் துரைராஜ சுந்தரனார் மூர்த்தியார்க்கு
நல்லறிவு வுடையதொரு மைந்தன்சாமி நலமான பாலனவனெவனுண்டு
புல்லவே தோழனுடன் கூடியல்லோ புகழான சாத்திரங்கள் ஓதும்போது
வல்லதொரு வாகுநாளென்றுசொல்லி வளமான விடுதிமுலை விட்டார்தாமே

விளக்கவுரை :


4585. விட்டாரே பாலனது குருவாம்சாமி விடுதிக்குப் போகவென்றுவிடையுந்தந்தார்
சட்டமுடன் இருவருமே பேசிக்கொண்டு தண்மையுடன் குளக்கரையில் படியில்நின்று
திட்டமுடன் ஸ்தானங்கள் செய்யும்போது திகழான எங்களது மைந்தன்தன்னை
வாட்டமுடன் முதலையது வந்துமல்லோ வாகுடனே மைந்தனைத்தான் விழுங்கிப்போச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4576 - 4580 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4576. கூறினார் சித்தர்முனி ரிஷிகள்தாமும் குறிப்பாகக் கிக்கிந்தா மலையினுச்சி
ஆறவே மேல்வரையிற் சென்றுமேதான் வன்பான போகரிஷிமுனிவர்தானும்
சீறலுடன் சினங்கொண்டு வுறுதிகொண்டு சிறப்பான சுனையருகில் கிட்டிநின்று
தேறவே சுனைமுகத்தைக்காணும்போது துப்புரவாய் சித்தொருவர் கண்டிட்டாரே

விளக்கவுரை :


4577. கண்டாரே போகரிஷிநாதர்தம்மை கனமான கிக்கிந்தா மலையில்சித்து
விண்டதொரு சுனைவளத்தை போகருக்கு விருப்பமுடன் உபதேசஞ் செய்யலுற்றார்
மண்டலங்கள் தான்புகழும் சுந்தரனார்தாமும் மகத்தான மதலைதனை யெழுப்பிவைத்து
துண்டரிகமானதொரு முதலைதானும் துப்புரவாய் இச்சுனையைக் காணலாமே

விளக்கவுரை :

[ads-post]

4578. காணலாம் எந்தனது வுத்தாரந்தான் கனமான சிறுபாலா சுனையின்பக்கல்
நீணவே வுத்தாரமன்றியல்லோ நீதியுடன் சுனையருகில் செல்லலாகா
பூணவே வுத்தாரம் பெற்றுக்கொண்டு புகழான போகரிஷி செல்லலாகும்
வேணபடி தாமுரைத்தார் சித்தர்தாமும் விருப்பமுடன் கேட்டாரே போகர்தாமே

விளக்கவுரை :


4579. தாமான போகரிஷி சித்துதாமும் தன்மையுடன் ரிஷியாரை வணங்கியேதான்
பூமானாஞ் சுந்தரனார் முதலைதன்னை புகழுடனே யடியேனுங்காணவென்று
வேமான மாகவல்லோ போகர்தாமும் விருப்பமுடன் ரிஷிதமையே கேட்டபோது
சீமானாம் போகரிஷிவந்தாரென்று சிறப்புடனே முதலைதனை யழைத்தார்காணே

விளக்கவுரை :


4580. காணவே போகரிஷிநாதர்தானுங் கனமான முதலைதனைக் கண்டபோது
நீணவே போகரிஷிநாதர்தானும் நியாயமுடன் முதலைதனைக் கண்டபோது
வேணவே வுபசாரமஞ்சலிகள்தானும் விருப்பமுடன் தான்செய்தார் போகர்தானும்
மாணவே சினங்கொண்டு போகர்தானும் மகத்தான முதலைதனை கண்டிட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4571 - 4575 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4571. பணிந்துமே சித்தர்முனி தன்னைநோக்கி பான்மையுடன் அவர்பாதம் தொழுதுமேதான்
துணிந்துமே காலாங்கி சீடனென்றார் துப்புரவாய் குளிகையது யானுங்கொண்டு
பணியான குளிகையது பூண்டுமல்லோ மகத்தான வையகங்கள் சுத்திவந்தேன்
கனிவுடனே கிக்கிந்தா மலையைக்கண்டு கருவான மலையென்று இறங்கஇனேனே

விளக்கவுரை :


4572. இறங்கியே வதிசயத்தை பார்க்கவென்று எழிலான சித்தருக்குத் தாமுரைத்தார்
திறமுடைய சித்தர்முனி மனதுவந்து தீர்க்கமுடன் காலாங்கி சீடனென்று
அறமதுவும் நேராமல் வாசீர்மித்து வன்புடனே போகருக்கு இதவுகூறி 
உறமுடனே உபதேசம் மிகவளித்து வுத்தமனார்க்கு வரமதுவும் கொடுத்தார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

4573. பாரேதான் போகரிஷிமுனிவர்தாமும் பாங்குடனே சித்துதமை கேட்கும்போது
நேரேதான் முகதாவில் போகருக்கு நேர்மையுடன் தாமுரைத்தார் சித்துதாமும்
தீரேதான் இம்மலையிலதிசயங்கள் திறமான வெகுகோடி சித்தரப்பா
ஊரேதான் மலைதானுஞ் சித்துநாடு ஓகோகோ நாதாக்கள் கூட்டந்தானே

விளக்கவுரை :


4574. கூட்டமாம் சுனைதனிலே மச்சமுண்டு கோடான கோடியுகம் இருக்கும்மச்சம்
நீட்டமுடன் சித்தர்முனி காவலுண்டு நெடிதான முதற்சுனையில் மைந்தாகேளு
தாட்டிகமாய் ரெண்டாங்கால் சுனையிலெல்லாந் தாக்கான முதலையுண்டு சித்துமுண்டு
வாட்டமுடன் யுகத்தில் குழந்தைதன்னை வாரியுண்ட முதலையின்தன் சுனையுமாமே

விளக்கவுரை :


4575. ஆமேதான் முன்யுகத்தில் சுந்தரமூர்த்தி வன்புடனே எழுப்பிவிட்ட முதலையப்பா
தாமேதான் மதலைதலை விழுங்கிவிட்ட தன்மையுள்ள முதலையிது யென்றுசொல்லி
வேமேதான் முததையின்றன் மகிமைதன்னை விருப்பமுடன் தாமுரைத்தார் போகருக்கு
தீமேதான் வாராமல் சித்துதாமும் சிறப்பான முதலைமொழி கூறினாரே

விளக்கவுரை :


Powered by Blogger.