சிவவாக்கியம் 311 - 315 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

311. அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவுகால் இரண்டுமாய்
செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்தஅப்பு நான்குமாய்
ஐந்துபாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனைச்
சிந்ததையில் தெளிந்தமாயை யாவர்காண வல்லரே.

விளக்கவுரை :

312. மனவிகாரம் அற்றுநீர் மதித்திருக்க வல்லீரேல்
நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்;
அனைவர் ஓதும் வேதமும் அகம்பிதற்ற வேணுமேல்
கனவுகண்டது உண்மைநீர் தெளிந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

[ads-post]

313. இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே.

விளக்கவுரை :

314. நீரிலே முளைத்தெழுந்த தாமரையின் ஓரிலை
நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பீரே.

விளக்கவுரை :

315. உறக்கிலென், விழிக்கிலென், உணர்வுசென்று ஒடுங்கிலென்
சிறந்த ஐம்புலன்களும் திசைத்திசைகள் ஒன்றிலென்?
புறமும்உள்ளும் எங்ஙனம் பொருந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பது ஏதும் இல்லையே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 306 - 310 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

306. மூலம்என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே
நாலுவேதம் நாவுளே நவின்றஞான மெய்யுளே
ஆலம்உண்ட கண்டனும் அரிஅயனும் ஆதலால்
ஓலம்என்ற மந்திரம் சிவாயமல்லது இல்லையே.

விளக்கவுரை :

307. தத்துவங்கள் என்றுநீர் தமைக்கடிந்து போவீர்காள்
தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ?
முத்திசீவன் நாதமே மூலபாதம் வைத்தப்பின்
அத்தனாரும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.

விளக்கவுரை :

[ads-post]

308. மூன்றுபத்து மூன்றையும் மூன்றுசொன்ன மூலனே
தோன்றுசேர ஞானிகாள் துய்யபாதம் என்தலை
என்றுவைத்த வைத்தபின் இயல்பும் அஞ்செழுத்தையும்
தோன்றஓத வல்லீரேல் துய்யசோதி காணுமே.

விளக்கவுரை :

309. உம்பர் வானகத்தினும் உலகபாரம் ஏழினும்
நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
செம்பொன் மாடம் மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான்
எம்பிரான் அலாதுதெய்வம் இல்லைஇல்லை இல்லையே.

விளக்கவுரை :

310. பூவலாய் ஐந்துமாய் புனலில்நின்ற நான்குமாய்
தீயிலாய மூன்றுமாய்ச் சிறந்தகால் இரண்டுமாய்
வேயிலாய தொன்றுமாய் வேறுவேறு தன்மையாய்
நீயலாமல் நின்றநேர்மை யாவர்காண வல்லரே?

விளக்கவுரை :



சிவவாக்கியம் 301 - 305 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

301. ஆகமத்தின் உட்பொருள் அகண்டமூலம் ஆதலால்
தாகபோக மின்றியே தரித்ததற் பரமும்நீ
ஏகபாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே
ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

302. மூலவாசல் மீதுளேஓர் முச்சரம் ஆகியே
நாலுவாசல் எண்விரல் நடுஉதித்த மந்திரம்
கோலம்ஒன்றும் அஞ்சுமாகும் இங்கலைந்து நின்றநீ
வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

[ads-post]

303. சுக்கிலத் தடியுளே சுழித்ததோர் எழுத்துளே
அக்கரத் தடியுளே அமர்ந்தஆதி சோதிநீ
உக்கரத் தடியுளே உணர்ந்த அஞ்செழுத்துளே
அக்கரம் அதாகியே அமர்ந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

304. குண்டலத்து ளேயுளே அறுத்தகத்து நாயகன்
கண்டவந்த மண்டலம் கருத்தழித்த கூத்தனை
விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள்
கண்டுகொண்ட மண்டலம் சிவாயமல்லது இல்லையே.

விளக்கவுரை :

305. சுற்றும்ஐந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்தியும் சிவனுமாக நின்றதன்மை ஓர்கிலீர்
சத்தியாவு தும்முடல், தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்காள் அறிந்திலீர் பிரான்இருந்த கோலமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 296 - 300 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

296. உள்ளினும் புறம்பினும் உலகமெங்கணும் பரந்து
எள்ளில்எண்ணெய் போலநின்று இயங்குகின்ற எம்பிரான்
மெள்ளவந்து என்னுட்புகுந்து மெய்த்தவம் புரிந்தபின்
வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே?

விளக்கவுரை :

297. வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப்பு இலாமையால்
போதம்நின்ற வடிவதாய்ப் புவனமெங்கும் ஆயினாய்,
சோதியுள் ஒளியுமாய்த் துரியமோடு அதீதமாய்
ஆதிமூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

[ads-post]

298. சாண்இரு மடங்கினால் சரிந்தகொண்டை தன்னுளே
பேணிஅப் பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர்,
தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லீரேல்
காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

299. அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால்
நெஞ்சுகூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால்
அஞ்சும்ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

300. அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம்
சக்கரத்து சிவ்வைருண்டு சம்புளத் திருந்ததும்
எள்கரந்த எண்ணெய்போல் எவ்வெழுத்தும் எம்பிரான்
உள்கரந்து நின்றநேர்மை யாவர்காண வல்லரே.

விளக்கவுரை :
Powered by Blogger.