296.
உள்ளினும் புறம்பினும்
உலகமெங்கணும் பரந்து
எள்ளில்எண்ணெய் போலநின்று இயங்குகின்ற எம்பிரான்
மெள்ளவந்து என்னுட்புகுந்து மெய்த்தவம் புரிந்தபின்
வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே?
விளக்கவுரை :
297.
வேதமொன்று கண்டிலேன்
வெம்பிறப்பு இலாமையால்
போதம்நின்ற வடிவதாய்ப் புவனமெங்கும் ஆயினாய்,
சோதியுள் ஒளியுமாய்த் துரியமோடு அதீதமாய்
ஆதிமூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
298.
சாண்இரு மடங்கினால்
சரிந்தகொண்டை தன்னுளே
பேணிஅப் பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர்,
தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லீரேல்
காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே.
விளக்கவுரை :
299.
அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே
அடங்கினால்
நெஞ்சுகூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால்
அஞ்சும்ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே.
விளக்கவுரை :
300.
அக்கரந்த அக்கரத்தில்
உட்கரந்த அக்கரம்
சக்கரத்து சிவ்வைருண்டு சம்புளத் திருந்ததும்
எள்கரந்த எண்ணெய்போல் எவ்வெழுத்தும் எம்பிரான்
உள்கரந்து நின்றநேர்மை யாவர்காண வல்லரே.
விளக்கவுரை :