சிவவாக்கியம் 486 - 490 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 486 - 490 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

486. எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை
மட்டதாக உம்முளே மதித்துநோக்க வல்லீரேல்
கட்டமான பிறவிஎன் கருங்கடல் கடக்கலாம்
இட்டமான ஒளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே.

விளக்கவுரை :

487. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்துரூபம் ஆகியே
வெண்மையான மந்திரம் விளைந்துநீற தானேதே
உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே.

விளக்கவுரை :

[ads-post]

488. தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரம் தலங்களாய்
முச்சுடரும் மூவிரண்டும் மூண்டெழுந்த தீச்சுடர்
வச்சிரம் அதாகியே வளர்ந்துநின்றது எவ்விடம்?
இச்சுடரும் இந்திரியமும் ஏகமானது எங்ஙனே?

விளக்கவுரை :

489. வல்லவாசல் ஒன்பதும் மறுத்தடைத்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர்ஐந்தும் சொல்லவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்ப தில்லையே.

விளக்கவுரை :

490. வண்டுபூ மணங்களோடு வந்திருந்த தேன்எலாம்
உண்டுளே அடங்கும்வண்ணம் ஓதுலிங்க மூலமாய்க்
கண்டுகண்டு வேரிலே கருத்தொடுங்க வல்லீரேல்
பண்டுகொண்ட வல்வினை பறந்திடும் சிவாயமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal