சிவவாக்கியம் 506 - 510 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 506 - 510 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

506. மாந்தர்வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே
சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லீரேல்
வேந்தன்ஆகி மன்றுளாடும் விமலன்பாதம் காணலாம்
கூந்தலம்மை கோணல்ஒன்றும் குறிக்கொணாதி துண்மையே.

விளக்கவுரை :

507. சருகருத்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்!
சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே;
வருவிருந்தோடு உண்டுஉடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே.

விளக்கவுரை :

[ads-post]

508. காடுமேடு குன்றுபள்ளம் கானின்ஆறு அகற்றியும்
நாடுதேசம் விட்டலைவர் நாதன்பாதம் காண்பரோ?
கூடுவிட்டு அகன்றுன்ஆவி கூத்தனூர்க்கே நோக்கலால்
வீடுபெற்ற அரன்பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே.

விளக்கவுரை :

509. கட்டையால்செய் தேவரும் கல்லினால்செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்
வெட்டவெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே.

விளக்கவுரை :

510. தங்கள்தேகம் நோய்ப்பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல்வைத்து ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளும்தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள்குலத்துத் தெய்வம்உம்மை உருக்குலைப்ப தில்லையே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal