சிவவாக்கியம் 491 - 495 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 491 - 495 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

491. ஓரெழுத்தில் லிங்கமாக ஓதும்அக் கரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்தும் மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே.

விளக்கவுரை :

492. தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும்
பாரபார பாரம்என்று பரிந்திருந்த பாவிகாள்!
நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லீரேல்
தூரதூர தூரமும் தொடர்ந்துகூடல் ஆகுமே.

விளக்கவுரை :

[ads-post]

493. குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கள்தோறும் மூழ்குறீர்
மண்டுகங்கள் போலநீர் மனத்தின் மாசறுக்கிலீர்;
மண்டைஏந்து கையரை மனத்திருந்த வல்லீரேல்
பண்டைமால் அயன்தொழப் பணிந்து வாழலாகுமே.

விளக்கவுரை :

494. கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல்
ஆடிரண்டு கன்றைஈன்ற அம்பலத்துள் ஆடுதே;
மாடுகொண்டு வெண்ணெய்உண்ணும் மானிடப் பசுக்களே!
வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே.

விளக்கவுரை :

495. நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்!
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal