251.
வஞ்சகப் பிறவியை மனத்துளே
விரும்பியே
அஞ்செழுத்தின் உண்மையை அறிகிலாத மாந்தர்காள்
வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லீரேல்
அஞ்செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ள லாகுமே.
விளக்கவுரை :
252.
காயிலாத சோலையில் கனியுகந்த
வண்டுகள்
ஈயிலாத தேனையுண்டு இராப்பகல் உறங்குறீர்
பாயிலாத கப்பலேறி அக்கரைப் படுமுனே
வாயினால் உரைப்பதாகு மோமவுன ஞானமே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
253.
பேய்கள்பேய்கள் என்கிறீர்
பிதற்குகின்ற பேயர்காள்,
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ
ஆதிபூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே.
விளக்கவுரை :
254.
மூலமண்ட லத்திலே முச்சதுரம்
ஆதியாய்
நாலுவாசல் எம்பிரான் நடுஉதித்த மந்திரம்
கோலிஎட்டு இதழுமாய் குளிர்ந்தலர்ந்த தீட்டமாய்
மேலும்வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே.
விளக்கவுரை :
255.
ஆதிநாடி நாடிஓடிக் காலைமாலை
நீரிலே
சோதிமூல மானநாடி சொல்லிறந்த தூவெளி
ஆதிகூடி நெற்பறித்தது அகாரமாதி ஆகமம்
பேதபேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே.
விளக்கவுரை :