321.
திருத்திவைத்த சற்குருவைச்
சீர்பெற வணங்கிலீர்
குருக்கொடுக்கும் பித்தரே கொண்டுநீந்த வல்லீரோ?
குருக்கொடுக்கும் பித்தரும் குருக்கொள்வந்த சீடனும்
பருத்திபட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே.
விளக்கவுரை :
322.
விழித்தகண் துதிக்கவும் விந்துநாத
ஓசையும்,
மேருவும் கடந்தஅண்ட கோளமும் கடந்துபோய்
எழுத்தெலாம் அழிந்துவிட்ட இந்திரசால வெளியிலே
யானும்நீயு மேகலந்த தென்னதன்மை ஈசனே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
323.
ஓம்நமோ என்றுமுளே
பாவையென்று அறிந்தபின்,
பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின்,
நானும்நீயும் உண்டடா நலங்குலம் அதுஉண்டடா,
ஊணும்ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் உனக்குளே.
விளக்கவுரை :
324.
ஐம்புலனை வென்றவர்க்கு
அன்னதானம் ஈவதால்
நன்புலன்க ளாகிநின்ற நாதருக்கது ஏறுமோ
ஐம்புலனை வென்றிடாது அவத்துமே உழன்றிடும்
வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே.
விளக்கவுரை :
325.
ஆணியான ஐம்புலன்கள்
அவையும்மொக்குகள் ஒக்குமோ?
யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ?
வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்திரேல்
ஊண்உறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே.
விளக்கவுரை :