471.
என்அகத்தில் என்னைநான்
எங்கும்ஓடி நாடினேன்
என்அகத்தில் என்னைஅன்றி ஏதும்ஒன்று கண்டிலேன்
மின்எழுப்பி விண்ணகத்தின் மின்ஒடுங்கு மாறுபோல்
என்அகத்துள் ஈசனோடு யானும்அல்ல தில்லையே.
விளக்கவுரை :
472.
இடங்கள்பண்ணி சுத்திசெய்தே
இட்டபீட மீதிலே
அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கும்ஞானம் எவ்விடம்?
அடங்குகின்றது எவ்விடம்? அறிந்துபூசை
செய்யுமே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
473.
புத்தகங் களைசுமந்து
பொய்களைப் பிதற்றுவீர்.
செத்திடம் பிறந்திடம் அதுஎங்ஙன்என்று அறிகிலீர்
அத்தனைய சிந்தனை அறிந்துநோக்க வல்லீரேல்
உத்தமத்துள் ஆயசோதி உணரும்போகம் ஆகுமே.
விளக்கவுரை :
474.
அருளிலே பிறந்துநின்று
மாயைரூபம் ஆகியே
இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ.
பொருளிலே தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லீரேல்
மருள்அதுஏது? வன்னியின் மறைந்ததே சிவாயமே.
விளக்கவுரை :
475.
தன்மசிந்தை ஆம்அளவும்
தவமறியாத் தன்மையாய்க்
கன்மசிந்தை வெயில்உழன்று கருத்தழிந்த கசடரே,
சென்மம்சென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை
நன்மையாக உம்முளே நயந்துகாண வேணுமே.
விளக்கவுரை :