326.
ஓடுகின்ற ஐம்புலன்
ஒடுங்கஅஞ் செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற பண்டித குணங்கள்மூன்று எழுத்துளே
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே.
விளக்கவுரை :
327.
புவனசக்க ரத்துளே பூதநாத
வெளியிலே,
பொங்குதீப அங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத்
தவனசோமர் இருவரும் தாம்இயங்கும் வாசலில்
தண்டுமாறி ஏறிநின்ற சரசமான வெளியிலே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
328.
மவுனஅஞ் செழுத்திலே வாசிஏறி
மெள்ளவே
வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின்
அவனும்நானும் மெய்கலந்து அனுபவித்த அளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே.
விளக்கவுரை :
329.
வாளுறையில் வாளடக்கம்
வாயுறையில் வாய்வடக்கம்
ஆளுறையில் ஆளடக்கம் அருமைஎன்ன வித்தைகாண்!
தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும்
நாளுறையில் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே.
விளக்கவுரை :
330.
வழுத்திடான் அழித்திடான்
மாயரூபம் ஆகிடான்
கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்
துவண்டிடான் அசைந்திடான் தூயதூபம் ஆகிடான்
சுவன்றிடான் உரைத்திடான் சூட்சசூட்ச சூட்சமே.
விளக்கவுரை :