சிவவாக்கியம் 71 - 75 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 71 - 75 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

71. இருக்கவேணும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ?
மரிக்கவேணும் என்றலோ மண்ணுளே படைத்தனர்?
சுருக்கமற்ற தம்பிரான் சொன்னஅஞ் செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம்கெடீர்.

விளக்கவுரை :

72. அம்பத்தொன்று என அடங்கலோர் எழுத்துளோ?
விண்பரந்த மந்திரம் வேதம்நான்கும் ஒன்றலோ
விண்பரந்த மூலஅஞ் செழுத்துளே முளைத்ததே
அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

[ads-post]

73. சிவாயம்என்ற அட்சரம் சிவன்இருக்கும் அட்சரம்
உபாயம்என்று நம்புதற்கு உண்மையான அட்சரம்
கபாடமற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம்இட்டு அழைக்குமே சிவாயஅஞ் செழுத்துமே.

விளக்கவுரை :

74. உருவம்அல்ல, வெளியும்அல்ல, ஒன்றைமேவி நின்றதல்ல
மருவும்வாசல் சொந்தம்அல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசலான தானும்அல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே?

விளக்கவுரை :

75. ஆத்துமா அனாதியோ? அனாத்துமா அனாதியோ?
பூத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ?
தர்க்கமிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ?
வீக்கவந்த யோகிகாள்? விரைந்துரைக்க வேணுமே!

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal