சிவவாக்கியம் 511 - 515 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 511 - 515 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

511. ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம்செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச்செய் பாதகர்
காசினியில் எழுநரகைக் காத்திருப்பது உண்மையே.

விளக்கவுரை :

512. நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்துநெற்றி மைதிலகம் இட்டுமே
மோசம்பொய் புனைசுருட்டு முற்றிலும்செய் மூடர்காள்
வேசரிகளம் புரண்டவெண் ணீறாகும் மேனியே.

விளக்கவுரை :

[ads-post]

513. வாதம்செய்வேன் வெள்ளியும் பொன்மாற்றுயர்ந்த தங்கமும்
போதவே குருமுடிச்சுப் பொன்பணங்கள் தரவெனச்
சாதனைசெய் தெத்திச்சொத்து தந்ததைக்க வர்ந்ததுமே
காததூரம் ஓடிச்செல்வர் காண்பதும் அருமையே.

விளக்கவுரை :

514. யோகசாலை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர்போல் பேருலகில் சாவரே.

விளக்கவுரை :

515. காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வதுஎங்கு மடிப்புமோசம் செய்பவர்
நேரமாகக் கஞ்சாஅடித்து நேர்அபினையைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal