சிவவாக்கியம் 291 - 295 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 291 - 295 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

291. பொருந்துநீரும் உம்முளே புகுந்துநின்ற காரணம்
எருதிரண்டு கன்றைஈன்ற ஏகமொன்றை ஓர்கிலிர்
அருகிருந்து சாவுகின்ற ஆவையும் அறிந்திலீர்
குருவிருந்து உலாவுகின்ற கோலம்என்ன கோலமே?  

விளக்கவுரை :

292. அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ?
சிம்புகளாய்ப் பரந்துநின்ற சிற்பரமும் நீயலோ?
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால்
எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

[ads-post]

293. ஈரொளிய திங்களே இயங்கிநின்றது தற்பரம்
ஏரொளீய திங்களே அஃது யாவரும் அறிகிலீர்
காரொளிப் படலமும் கடந்துபோன தற்பரம்
தாரொளிப் பெரும்பதம் ஏகநாத பாதமே.

விளக்கவுரை :

294. கொள்ளொணாது மெல்லொணாது கோதாறக் குதட்டடா
தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன்
விள்ளொணாது பொருளைநான் விளம்புமாறது எங்ஙனே?

விளக்கவுரை :

295. வாக்கினால் மனத்தினால் மதித்தகார ணத்தினால்
நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கைஎங்கண் நோக்குமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal