சிவவாக்கியம் 216 - 220 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 216 - 220 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

216. ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை
போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள்,
சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே!

விளக்கவுரை :

217. ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகா ரணத்திலே
நாக்கைமூக்கையுள் மடித்து நாதநாடி யூடுபோய்
ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லீரேல்
பார்க்கப்பார்க்கத் திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே.

விளக்கவுரை :

[ads-post]

218. அஞ்சும்அஞ்சும் அஞ்சும்அஞ்சும் அல்லல்செய்து நிற்பதும்
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லீரேல்
அஞ்சும்அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

219. அஞ்செழுத்தி னாதியாய் அமர்ந்துநின்றது ஏதடா?
நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீசெபிப்பது ஏதடா?
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா?
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே.

விளக்கவுரை :

220. உயிரிருந்தது எவ்விடம்? உடம்பெடுப்பு தன்முனம்?
உயிரதாவது ஏதடா? உடம்பதாவது ஏதடா?
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா?
உயிரினால் உடம்பெடுத்த உண்மைஞானி சொல்லடா.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal