சிவவாக்கியம் 161 - 165 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 161 - 165 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

161. ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙனே?
செய்யதெங்கு இளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே.
ஐயன்வந்து மெய்யகம்புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே!

விளக்கவுரை :

162. நவ்வுமவ்வை யும்கடந்து நாடொணாத சியின்மேல்
வவ்வுயவ்வு ளும்சிறந்த வண்மைஞான போதகம்
ஒவ்வுசத்தி யுள்நிறைந்து உச்சியூ டுருவியே
இவ்வகை அறிந்தபேர்கள் ஈசன்ஆணை ஈசனே.

விளக்கவுரை :

[ads-post]

163. அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ?
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ?
தர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ?
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ?

விளக்கவுரை :

164. பார்த்ததேது? பார்த்திடில் பார்வையூ டழிந்திடும்
கூர்த்ததாய் இருப்பிரேல் குறிப்பில்அச் சிவமதாம்;
பார்த்தபார்த்த போதெல்லாம் பார்வையும் இகந்துநீர்
பூத்தபூவுங் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிரே.

விளக்கவுரை :

165. நெற்றிபற்றி உழலுகின்ற நீலமா விளக்கினைப்
பத்திஒத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன்
உற்றிருநது பாரடா, உள்ஒளிக்கு மேல்ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அரிந்தவன் அனாதியே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal