சிவவாக்கியம் 66 - 70 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 66 - 70 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

66. கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்துவாய் விழிந்துபோன பாவம் என்னபாவமே?
அழுத்தமான வித்திலே அனாதியான இருப்பதோர்
எழுத்திலா எனழுத்திலோ இருக்கலாம் இருந்துமே.

விளக்கவுரை :

67. கண்டுநின்ற மாயையும் கலந்துநின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லீரேல்
பண்டைஆறும் ஒன்றுமாய்ப் பயந்தவேத சுத்தனாய்
அண்டமுத்தி ஆகிநின்ற ஆதிமூலம் மூலமே!

விளக்கவுரை :

[ads-post]

68. ஈன்றவாச லுக்குஇரங்கி எண்ணிறந்து போவீர்காள்!
கான்றவாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
நான்றவாச லைத்திறந்து நாடிநோக்க வல்லீரேல்,
தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே.

விளக்கவுரை :

69. உழலும்வாச லுக்குஇரங்கி ஊசலாடும் ஊமைகாள்?
உழலும்வாச லைத்திறந்து உண்மைசேர எண்ணிலீர்?
உழலும்வாச லைத்திறந்து உண்மைநீர் உணர்ந்தபின்
உழலும்வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே.

விளக்கவுரை :

70. மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;
ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal