சிவவாக்கியம் 501 - 505 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 501 - 505 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

501. சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத்
திட்டநெட்டு எழுந்தறியாது ஏங்கிநோக்கு மதவலீர்
பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்டம் அறியிரோ?
கட்டவிழ்த்துப் பிரமன்பார்க்கில் கதிஉமக்கும் ஏதுகாண்?

விளக்கவுரை :

502. வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே!
காதகாத தூரம்ஓடிக் காதல்பூசை வேணுமோ?
ஆதிநாதன் வெண்ணெய் உண்டஅவனிருக்க நம்முளே?
கோதுபூசை வேதம்ஏது குறித்துப்பாரும் உம்முளே.

விளக்கவுரை :

[ads-post]

503. பரம்இலாதது எவ்விடம்? பரம்இருப்பது எவ்விடம்?
அறம்இலாத பாவிகட்குப் பரம்இலைஅது உண்மையே;
கரம்இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது
பரம்இலாத சூனியமாம் பாழ்நரகம் ஆகுமே.

விளக்கவுரை :

504. மாதர்தோள் சேராததேவர் மானிலத்தில் இல்லையே!
மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே,
மாதராகும் சத்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்துகொண்டான் ஈசனே.

விளக்கவுரை :

505. சித்தர்என்றும் சிறியர்என்றும் அறியொணாத சீவர்காள்!
சித்தர்இங்கு இருந்தபோது பித்தர்என்று எண்ணுவீர்!
சித்தர்இங்கு இருந்தும் என்ன பித்தன்நாட்டிருப் பாரோ?
அத்தன்நாடும் இந்தநாடும் அவர்களுக்கெலா மொன்றே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal