சிவவாக்கியம் 281 - 285 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 281 - 285 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

281. ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே
போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே
யாவரும் பரத்துளே யானும் அப்பரத்துளே.

விளக்கவுரை :

282. ஏழுபார் எழுகடல் இடங்கள்எட்டு வெற்புடன்
சூழுவான் கிரிகடந்து சொல்லும் ஏழுலகமும்
ஆழிமால் விசும்புகொள் பிரமாண்டரண்ட அண்டமும்
ஊழியான் ஒளிக்குளே உதித்துடன் ஒடுங்குமே.

விளக்கவுரை :

[ads-post]

283. கயத்துநீர் இறைக்குறீர் கைகள்சோர்ந்து நிற்பதேன்?
மனத்துள்ஈரம் ஒன்றிலாத மதிஇலாத மாந்தர்காள்;
மனத்துள்ஈரம் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லீரேல்
நினைத்திருந்த சோதியும் நீயும்நானும் ஒன்றலோ?   

விளக்கவுரை :

284. நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு செய்கிறீர்
ஆரைஉன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரைஉன்னி வித்தைஉன்னி வித்திலே முளைத்தெழும்
சீரைஉன்ன வல்லீரேல் சிவபதம் அடைவிரே.

விளக்கவுரை :

285. பத்தொடொத்த வாசலில் பரந்துமூல வக்கரம்
முத்திசித்தி தொந்தமென்று இயங்குகின்ற மூலமே
மத்தசித்த ஐம்புலன் மாகரமான கூத்தையே
அத்தியூரர் தம்முளே அமைந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal