91.
உடம்புஉயிர் எடுத்ததோ, உயிர்உடம்பு
எடுத்ததோ
உடம்புஉயிர் எடுத்தபோது உருவம்ஏது செப்புவீர்
உடம்புஉயிர் இறந்தபோது உயிர்இறப்பது இல்லையே
உடம்புமெய் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே.
விளக்கவுரை :
92.
அவ்வெனும் எழுத்தினால்
அகண்டம்ஏழு ஆக்கினாய்;
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை;
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்;
அவ்வும்உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
93.
மந்திரங்கள் உண்டுநீர்
மயங்குகின்ற மானிடீர்!
மந்திரங்கள் ஆவதும் மறத்தில்ஊறல் அன்றுகாண்;
மந்திரங்கள் ஆவது மதத்தெழுந்த வாயுவை;
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம்ஏதும் இல்லையே!
விளக்கவுரை :
94.
என்னஎன்று சொல்லுவேன்
இலக்கணம் இலாததை?
பன்னுகின்ற செந்தமிழ்ப் பதம்கடந்த பண்பென
மின்னகத்தில் மின்ஒடுங்கி மின்னதான வாறுபோல்
என்னகத்துள் ஈசனும் யானும்அல்லது இல்லையே!
விளக்கவுரை :
95.
ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆலமான
வாறுபோல்
வேறுவித்தும் இன்றியே விளைந்துபோகம் எய்திடீர்!
ஆறுவித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே!
பாரும்இத்தை உம்முளே பரப்பிரமம் ஆனதே!
விளக்கவுரை :