சிவவாக்கியம் 401 - 405 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 401 - 405 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

401. மென்மையாகி நின்றதேது விட்டுநின்று தொட்டதேது?
உண்மையாக நீயுரைக்க வேணும்எங்கள் உத்தமா?
பெண்மையாக நின்றதொன்று விட்டுநின்று தொட்டதை
உண்மையாய் உரைக்கமுத்தி உட்கலந்து இருந்ததே.

விளக்கவுரை :

402. அடக்கினால் அடங்குமோ அண்டம்அஞ் செழுத்துளே?
உடக்கினால் எடுத்தகாயம் உண்மையென்று உணர்ந்துநீ
சடக்கிலாறு வேதமும் தரிக்கஓதி லாமையால்
விடக்குநாயு மாயவோதி வேறுவேறு பேசுமோ?

விளக்கவுரை :

[ads-post]

403. உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும்
தண்மையான காயமும் தரித்தரூபம் ஆனதும்
வெண்மையாகி நீரலே விளைந்துநின்ற தானதும்
உண்மையான ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே.

விளக்கவுரை :

404. எள்ளகத்தில் எண்ணெய்போல் எங்குமாகி எம்பிரான்
உள்ளகத்தி லேயிருக்க ஊசலாடும் மூடர்காள்
கொள்ளைநாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லீரேல்
வள்ளலாகி நின்றசோதி காணலாகும் மெய்மையே.

விளக்கவுரை :

405. வேணும் என்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே
தாணுஉண்டங்கு என்கிறீர் தரிக்கிலீர், மறக்கிலீர்
தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி உம்முளே
காணும்அன்றி வேறுயாவும் கனாமயக்கம் ஒக்குமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal