சிவவாக்கியம் 316 - 320 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 316 - 320 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

316. ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர்எழுத்தும் ஒன்றதே
வேதம் என்ற தேகமாய் விளம்புகின்றது அன்றிது,
நாதம்ஒன்று நான்முகன் மாலும்நானும் ஒன்றதே!
ஏதுமின்றி நின்றதொன்றை யான்உணர்ந்த நேர்மையே

விளக்கவுரை :

317. பொங்கியே தரித்தஅச்சுப் புண்டரீக வெளியிலே
தங்கியே தரித்தபோது தாதுமா துளையதாம்
அங்கியுள் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க்
கொம்புமேல் வடிவுகொண்டு குருஇருந்த கோலமே.

விளக்கவுரை :

[ads-post]

318. மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறது எங்கெனில்
மண்ணினோடு சோதிபோல் கலந்தநாத விந்துவும்
அண்ணலோடு சத்தியும் அஞ்சுபஞ்சு பூதமும்
மண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழும் இன்றுமே.

விளக்கவுரை :

319. ஒடுக்குகின்ற சோதியும் உந்திநின்ற ஒருவனும்
நடுத்தலத்தில் ஒருவனும் நடந்துகாலில் ஏறியே
விடுத்துநின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்
அடுத்துநின்ற அறிமினோ அனாதிநின்ற ஆதியே.

விளக்கவுரை :

320. உதித்தமந் திரத்தினும் ஒடுங்கும் அக்கரத்தினும்
மதித்தமண் டலத்தினும் மறைந்துநின்ற சோதிநீ,
மதித்தமண் டலத்துளே மரித்துநீ இருந்தபின்
சிரித்தமண் டலத்துளே சிறந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal