சிவவாக்கியம் 336 - 340 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 336 - 340 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

336. மிங்குஎன்ற அட்சரத்தின் மீட்டுவாகிக் கூவுடன்
தூங்கமாகச் சோமனோடு சோமன்மாறி நின்றிடும்
அங்கமா முனைச்சுழியில் ஆகும்ஏகம் ஆகையால்
கங்குலற்றுக் கியானமுற்றுக் காணவாய் சுடரொளி.

விளக்கவுரை :

337. சுடரெழும்பும் சூட்சமும் கழிமுனையின் சூட்சமும்
அடரெழும்பி ஏகமாக அமர்ந்துநின்ற சூட்சமும்
திடரதான சூட்சமும் திரியின்வாலை சூட்சமும்
கடலெழும்பு சூட்சமும் கண்டறிந்தோன் ஞானியே.

விளக்கவுரை :

[ads-post]

338. ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடிகோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலா சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமல் கோடிகோடி முன்னறிந்த தென்பரே.

விளக்கவுரை :

339. சூட்சமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே
வீச்சமான வீயிலே விபுலைதங்கும் வாயிலே
கூச்சமான கொம்பிலே குடிஇருந்த கோவிலே
தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

340. பொங்கிநின்ற மோனமும் பொதிந்துநின்ற மோனமும்
தங்கிநின்ற மோனமும் தயங்கிநின்ற மோனமும்
கங்கையான மோனமும் கதித்துநின்ற மோனமும்
திங்களான மோனமும் சிவனிருந்த மோனமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal